எச்சரிக்கை!
"அஹ்லே சைத்தான்" என்ற விசகிருமி ஊருக்குள் ஊடுருவி உள்ளது!
நமது உயிருனும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இஜிவு படுத்தும் விதமாக, பாங்கு மற்றும் இகாமத் கூறும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் கூறக்கூடாது என்றும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் அத்தகியாதில் இருப்பதால் அந்த அத்தகியாதே ஓத கூடாது என்றும், தொழுகையில் அல்ஹம்து சூராவை தவிர வேறு எதையும் ஓதக்கூடாது என்றும், ஹதிஸ் எதனையும் பின்பற்றவேண்டியதில்லை, எல்லா ஹதிசும் கட்டுகதைகள் என்றும் கூறிவருகிறார்கள். கடைசியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபியே அல்ல என்றும் கூறுகிறார்கள் .மேலும், வட்டி வாங்கலாம், தாடி வைக்கவேண்டியதில்லை, வரதட்சனை வாங்கலாம், ஆண்களுக்கு பவுன் ஹராம் இல்லை, என்று பைத்தியம் பிடித்து பிதற்றுகிறார்கள்.
அன்பு சகோதர, சகோதரிகளே, இந்த விசகிருமிகளை இனம்கண்டு, இறைவனிடம் பாதுகாப்பு தேடிக்கொள்ளுங்கள்.
இப்படிக்கு,
ஜாக் மர்கஸ்,
தோப்புத்துறை
எச்சரிக்கை!
Labels:
Markaz