வெள்ளை மாளிக்கைக்கு தலிபான் குறி

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் நியூயார்க், லண்டன் நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் தெரிவித்துள்ளார்.
கத்தார் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டியில், இதனை அவர் தெரிவித்ததாக, இஸ்லாமாபாத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.
மொத்தம் 25 நிமிடங்கள் ஒளிபரப்பான இப்பேட்டியில், தங்களுடைய (தலிபான்) முதல் இலக்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவாக, பாகிஸ்தான் அதிபர் முஷாரப் செயல்படுவதாக தெரிவித்துள்ள பைதுல்லா, விரைவில் தங்கள் கூட்டணியில் உள்ள அமைப்புகள் அவருக்கு சரியான பாடம் புகட்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக போராட, பாகிஸ்தான் தலிபான் இயக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 40 இனவாத குழுக்கள் இடம்பெற்றுள்ள இந்த இயக்கத்தின் தலைவராக பைதுல்லா மசூத் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

thnks - Msn Tamil