சவுதி : பாதிக்கப்பட்ட தமிழுருக்கு உதவி
சவுதி அரேபியாவின் அல் கர்ஜ் பகுதியில் பணிபுரிந்து வந்தவர் முஹம்மது கனி(வயது 52).
தமிழகத்தில் திட்டக்குடி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஆடு மேய்த்துக்கொண்டு ஒரு கூடாரத்தில் தங்கியிருந்த போது அவரது கழுத்திலும், நடு எலும்பிலும் தாக்கிவிட்டு அவர் வசம் இருந்த அடையாள அட்டை, ஆயிரம் ரியால் உள்ளிட்டவற்றை பறித்து விட்டுச் சென்று விட்டனர்.
இதனையறிந்த சிலர் அவரை ரியாத் மருத்துவமனைக்கு காரில் அனுப்பியுள்ளனர். அவரைப் பற்றிய முழு விபரம் இல்லாததால் மருத்துவமனை அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டது.
உதவியின்றி தவித்த அவரை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சுமேசி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அவர் குறித்த தகவல் மலையாள நாளிதழில் வெளியாகியுள்ளது.
முஹம்மது கனிக்கு விசா வழங்கிய அரபியை தொடர்பு கொண்டபோது அவர் ஒரு சாதாரண கிராம வாசி என்பதால் அவரால் உதவிட இயலவில்லை. பின்னர் இந்திய தூதரகம் அனுமதிக் கடிதத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கழுத்து எலும்பும், நடு எலும்பும் முறிந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்யவில்லையென்றால் வாழ்நாள் முழுவதும் கை, கால் செயல் இழந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் உதவி செய்து வருகின்றன.
தகவல் உதவி : இம்தியாஸ், ரியாத் ( imthias@imthias.com )
சவுதி : பாதிக்கப்பட்ட தமிழுருக்கு உதவி
Labels:
Ulagam