அதிரை/முஸ்லிம் செய்திகளை திரிக்கும் தினமலர

அதிரை/முஸ்லிம் செய்திகளை திரிக்கும் தினமலர்
அலுவலகத்தில் பணியாற்றிய சக பெண்ஊழியரிடம் பாலியல் சில்மிசம் செய்து நாறிப்போன பின்னணி கொண்டது முதல் "சண்டேன்னா ரெண்டு" என்ற ஆபாச/வக்கிர விளம்பரத்துடன் பொய்ச்செய்திகளை முந்தித்தரும் தினமல(ர்)ம், முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை திரித்தும் ஆதாரம் இன்றியும் எழுதி, முஸ்லிம்கள்மீது வாசிப்பவருக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் செய்திகளைத் தருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால் தினமலரை "தினமலம்" என்று அழைக்கிறார்கள்.






சண்டேன்னா twice


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை உலக அதிசயமாக்கவும், இல்லாத ராமர் பாலத்தை நாசா விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்டதாகவும் புழுகும் திறமை மற்ற பத்திரிக்கைகளைவிட தினமலருக்குக் கொஞ்சம் "ஜாஸ்தி"

இந்திய கட்டிடம் ஒன்று உலகப்புகழ் பெறுவதால் இந்தியராகிய நமக்குப் பெருமை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.தினமல(ர்)த்தின் நோக்கம் முஸ்லிம்களின் பாரம்பர்ய அடையாளத்தைச் சொல்லும் மொகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹான் கட்டிய தாஜ் மஹாலை பின்னுக்குத் தள்ளி மதுரை மீனாட்சியம்மன் கோவிலை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதாலேயே தமிழ் பத்திரிக்கைகளில் தினமல(ர்)ம் மட்டுமே ஒரு வருடத்திற்கும் மேலாக இதை விளம்பரப்படுத்தி பக்கத்தையும் நேரத்தையும் வீணடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகமலர் என்ற பெயரில் பார்ப்பனச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து, கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியாரின் அருளுரைகளை எழுதி வருவதோடு, தாழ்த்தப்பட்ட இந்துக்களின் தெய்வ வழிபாட்டை மூடநம்பிக்கை என்பதாகவும், அசைவம் சாப்பிடுவதால் உடலுக்குக் கேடு; மாட்டு மூத்திரம் (கோமியம்) உடலுக்கு நல்லது; மருத்துவக் குணமுள்ளது என்றெல்லாம் எழுதி தனது மேல்சாதித் திமிரை அவ்வப்போது காட்டியும் வருகிறது.

தமிழ் நாளிதழ் என்ற பெயரை வைத்துக் கொண்டு "நச்" நறுக்" "சதக்" "ஏவ்" "ஸ்வாஹா" என்றெல்லாம் தமிழரையும் தமிழையும் கிண்டலடிக்கும் தமிழர் விரோத தினமல(ர்)ம் முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான சிறுசெய்தியாக இருந்தாலும் பேணை பெருமாளாக்கித் தேவையற்ற வெறுப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்துவதை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது.

தவ்பீக் குறித்து பரபரப்பான செய்திகள் என்ற பெயரில் இல்லாததும் பொல்லாததுமாக எழுதிவருவதை அதிரையைப் பற்றியும் தவுபீக் பற்றியும் அறியாதவர்கள் வேண்டுமானால் நம்பலாம். உள்ளூர்வாசிகளால் இதை எப்படி நம்பமுடியும்?

கடந்த நான்கு நாட்களாக தவ்பீக் பற்றிய செய்திகளை தினமலர் எழுதும் விதம் அதிராம்பட்டினம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தினமலரின் வெறுப்பு அப்பட்டமாகத் தெரிகிறது.தன்மீதான வழக்குகளை நடத்தக் கஷ்டப்பட்டுவரும் நபர் ஹவாலா பிசினஸ் செய்து இயங்கி வருவதாகச் சொல்வது நகைப்பிற்குறியது. .

"பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:பணத்துக்காக மட்டுமே "ஹவாலா' தொழிலில் ஈடுபடுவோரால், வரி ஏய்ப்பு மட்டுமே நடக்கிறது.ஆனால், மத அடிப்படைவாதிகள் இது போன்ற தொழிலில் களமிறங்குவது, நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தானது" என்று ஹவாலாவை மார்வாடி சேட்கள் செய்து வருவதை நியாயப்படுத்தியுள்ளது. தேசதுரோகச் செயலை யார் செய்தாலும் தேசத்திற்கே ஆபத்து என்று சொல்லாமல் முஸ்லிம்கள் செய்தால் மட்டுமே ஆபத்து என்பதுபோல் எழுதியிருப்பது அயோக்கியத் தனத்தின் உச்சம்!

மேலும், "தமிழகத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர், வெளிநாட்டில் வேலை செய்கின்றனர்.இவர்களில் பலர், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பும் போது, அன்னிய செலாவணி சட்டவிதிகளை பின்பற்றுவதில்லை. மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து "ஹவாலா' ஏஜென்ட் வழியாக பணத்தை அனுப்புகின்றனர்; இதற்கு "உண்டியல் டிரான்ஸேக்ஷன்' என்ற அடைமொழியும் உண்டு"

என்று எழுதி இருப்பதன் மூலம் மேற்கண்ட ஊர்மக்கள் மட்டும்தான் தமிழகத்தில் ஹவாலா மூலம்பணம் அனுப்பி வருவதாகவும் மற்றவர்கள் வங்கிகள் மூலமே பணப்பரிவர்த்தனை செய்வதாகவும் காழ்புணர்வுடன் எழுதியுள்ளதும். மேற்குறிப்பிட்ட ஊர்களில் முஸ்லிம்கள் நிறைந்து வாழ்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டால் தினமல(ர்)த்தின் வெறி தெளிவாக விளங்குகிறது.

தொடர்புடைய தினமல(ர்)ம் நாளிதழ் செய்திகளின் சுட்டிகள்:

http://www.dinamalar.com//Sambavamnewsdetail.asp?News_id=2022

http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=2022&cls=row3&ncat=TN

http://www.dinamalar.com//kutramnewsdetail.asp?News_id=606

இனியும் தினமலர் முஸ்லிம்கள் குறித்த செய்திகளில் காழ்புணர்வைக் கொட்டி எழுதி வந்தால், தினமலர் பரவலான அதிரை மற்றும் முஸ்லிம் வாசகர்களை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

நன்றி : அதிரை எக்ஸ்ப்ரெஸ்

ஐக்கிய அரபு எமிரேட் :விசா கட்டணம்

ஐக்கிய அரபு எமிரேட் அரசு, விசா அனுமதிக்கான கட்டணதை ஜுலை முதல் உயர்த்தியுள்ளது. ஒரு மாதத்துக்கான விசா கட்டணம் 200 தினாரில் இருந்து 500 தினாராக (5,839) உயர்த்தப்படுகிறது.
3 மாதங்களுக்கான விசா கட்டணம் 1000 தினாராக உயர்த்தப்படுகிறது. இதற்கு முன்பு இதற்கான கட்டணம் 700 தினார்.
2000 தினார்( ரூ.23.200) கட்டணத்தில் 6 மாத விசாவும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் 6 மாதங்களுக்கு நாட்டில் தங்கியிருக்கலாம். இடையில் எத்தனை முறை வேண்டுமானாலும் சொந்த நாட்டுக்கு சென்று வரலாம். கம்பெனிகள் தங்கள் அதிகாரிகளுக்கு இந்த 6 மாத விசாவை பெறலாம்.தெழிலாளர்களை இந்த விசா மூலம் அழைத்து செல்ல முடியாது.
சுற்றுலா பயணிகள், தொழிலதிபர்கள்,ஐக்கிய ஆரபு எமிரெட்டில் குடியிருப்போரின் உறவினர்களுக்காக இத்தகைய விசா ( விசிட்டர் விசா) தரப்படும்.

நன்றி தினமணி

தோப்புத்துறையில் இஸ்லாமிய பெண்கள் அரபிக் கல்லூரி

தோப்புத்துறையில் இஸ்லாமிய பெண்கள் அரபிக் கல்லூரி



















நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறை யில் மர்கஸ் தெருவில் அமைத்துள்ளது மஸ்ஜிதுல் முஸ்லிமீன் ( மர்கஸ் பள்ளி ), இந்த மர்கசில் ங்கால தொழுகை நடப்பதோடு இஸ்லாமிய பெண்களுக்கு மார்க்கக் கல்வியை போதிப்பதற்காக இங்கு சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்க பட்டது தான் "அஸ் சலிஹாத் பெண்கள் அரபிக் கல்லூரி "

இதில் குர்-ஆன், ஹதீஸ் அடிப்படையில் வகுப்புகள் நடத்த படுகிறது, உள்ளுரைச் சார்ந்த மாணவிகள் தற்போது பயின்று வருகிறார்க
ள்,இந்த கல்லுரியை உள்ளூர் ஜாக் ஜமாஅத் -தை சார்ந்தவர்கள் நிர்வகித்து வருகிறார்கள்,இங்கு ஹாஸ்டல் வசதி கிடையாது,

இக்கல்லுரியை விரிவு படுத்தவும் மற்றும் கல்வியை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

---------------------------------------------------------------------------------
சமுதாயம் . ப்ளோக் ஷ்போட்.காம் -
.: இது நம்ம சமுதயம் :.

துருக்கியில் இஸ்லாமிய பழக்கவழக்கங்களுக்கு தடை




துருக்கியில் இஸ்லாமிய பழக்கவழக்கங்களுக்கு தடை
வி.என்.முகம்மது உசேன் ( from Tmmk.in )





துருக்கியில், 40 வருடங்களுக்குப் பிறகு, ஒரு தனிக்கட்சி மக்களவை தேர்த­ல் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சி செலுத்தி வருகிறது. இதுவரை ஐரோப்பிய ஆபாச நாகரீகத்தில் மூழ்கிக் கிடந்த துருக்கி மக்களை அதி­ருந்து விடுபட செய்து, இஸ்லாமிய பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கும் ஓர் அரசாங்கமாக இருந்து வருகிறது. ஐரோப்பா கண்டத்தில் ஒரு சில நாடுகளில் தான் முஸ்­ம்கள் அதிகமாக வாழ்கின்றனர். இதில் ஒன்று துருக்கி; மொத்தம் ஏழுகோடி மக்களில், மிகுதியானோர் முஸ்­ம்கள். இந்நாட்டின் அதிபர், பிரதமர், உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி, அரசாங்க மூத்த வக்கீல் என எல்லா முக்கிய பதவிகளிலும் முஸ்­ம்கள் இருக்கின்றனர். எனினும் ''மதச்சார்பற்ற கொள்கை'' என்ற பெயரில், இஸ்லாமிய பழக்க வழக்கத்திற்கு அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் தடை விதிக்க முயல்கின்றது.
துருக்கியர் :
துருக்கியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை ஆராய்வதற்கு முன்னதாக, துருக்கியில் உள்ள முஸ்­ம்களுக்கும் தமிழ்நாட்டில் வாழும் முஸ்­ம்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை காணலாம். இந்த இரு நாட்டு மக்களையும் இணைப்பது இஸ்லாமிய மார்க்கம். மற்றப்படி மொழி, உணவு, உடை பழக்கவழக்கங்களில் மிகுதமாக வேற்றுமையை காணலாம். இருப்பினும் தமிழ்நாட்டில் உள்ள முஸ்­ம்களை இங்குள்ள இந்துக்கள் விளங்காமல் துருக்கியர் என்று சில காலங்களுக்கு முன்பு வரை அழைத்து வந்தனர். 70லி80 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் வாழ்ந்த முஸ்­ம்கள், சரக்குகளை அளக்கும் மரக்கால் போன்ற வடிவில், மெருன் கலரில், குஞ்சம் வைத்த தொப்பியை அணிந்து வந்தனர். அதே தொப்பியை துருக்கியி­ருந்து. மேலும் இறக்குமதி செய்து தமிழ்நாட்டில் உள்ள சில முஸ்­ம்கள் அணிந்து வந்தனர். இதனாலேயே தமிழ் மண்ணில் பிறந்து, இங்கேயே வளர்ந்து வந்த முஸ்­ம்களை சிலர் துருக்கியர் என்று அழைத்தனர். இப்போது இந்த தொப்பி துருக்கியிலு மில்லை தமிழ்நாட்டில் இந்தப் பெயரும் மறைந்து வருகிறது.
ஐரோப்பிய யூனியன் :
ஐரோப்பிய நாட்டில் உள்ள பதினைந்து நாடுகள் சேர்ந்து ஐரோப்பிய யூனியன் என்ற அமைப்பினை ஏற் படுத்தி உள்ளது. இந்த நாடுகளுக்கு பொதுவான நாணயமாக 'யூரோ' உள்ளது. இந்த நாடுகளுக்கு இடையே வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இந்த நாடுகள் எல்லாம் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளாக மாறி வருகின்றன. இந்த யூனியனில் துருக்கியை சேர்த்துக் கொள்ள தயங்குகின்றனர். ஐரோப்பிய யூனியனில் துருக்கி சேர்ந்தால் அதன் பொருளாதார வளர்ச்சியும் வேகம் அடையும். எனவே ஐரோப்பிய நாகரீகத்தை பின்பற்ற வேண்டும் என்று துருக்கியிலுள்ள வசதி படைத்த முஸ்­ம் கள் நினைக்கின்றனர். ஐரோப்பிய யூனியனில் சேர வேண்டும், அதே சமயம் இஸ்லாமிய பழக்க வழக்கங்களை விட்டு விடக்கூடாது என்ற கொள்கை உடைய அரசியல் கட்சிதான் இன்று துருக்கியில் ஆட்சியில் அமர்ந்து இருக்கும் ''நீதியும் பொருளாதார வளர்ச்சியும்'' என்ற கட்சி.

இன்று துருக்கியில் ஏற்பட் டுள்ள அரசியல் நெருக்கடியை தெரிந்து கொள்வதற்கு முன், மதச்சார்பற்ற கொள்கை, மதவிரோத கொள்கை இரண்டிற்கும் உள்ள வேற்றுமையை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு, குங்குமம் வைப்பதை இந்து மத பழக்கமாக கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள முஸ்­ம் பெண்கள் தலை, முகத்தை மறைத்துக் கொள்ள ஸ்கார்ப் அணிவதை அல்லது உடல் முழுவதும் மறைக்க பர்தா அணிவதை பழக்கமாக கொண்டுள்ளனர்.

இதில் அரசாங்கம் தலையிடாமல் இருந்தால் அது மதச்சார்பற்ற கொள் கைக்கு உதாரணமாக எடுத்துக் கொள்ள லாம். இந்துப் பெண்கள் பொட்டு இடுவதையும், முஸ்­ம் பெண்கள் பர்தா அணிவதையும் தடுத்தால் மத விரோத கொள்கையாக எடுத்துக் கொள்ளலாம். இன்று துருக்கியில் உள்ள அரசியல் சட்டம் மதச்சார்பற்ற கொள்கை என்று கருதி, மதவிரோத கொள்கையை சட்டமாக கொண்டு உள்ளது.

துருக்கி நாட்டின் அரசியல் சட்டம், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவி கள் தலையில் 'ஸ்கார்ப்' அணிவதை தடைசெய்து உள்ளது. ரிசப்தய்யூப் எர்டோகன் என்பவரை பிரதமராக கொண்டு இன்று துருக்கியில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், ஸ்கார்ப் அணியும் பழக்கத்தை தடை செய்யும் சட்டத்தை நீக்க முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து அரசாங்க வக்கீல் துருக்கி நாட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கினை எடுத்துக் கொண்ட துருக்கி உச்சநீதி மன்றம் பிரதமரையும், அவருடைய கட்சியையும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யும் வழக்கினை விசாரிக்க ஏற்றுக் கொண்டுள்ளது.

துருக்கி நாட்டின் பிரதமர் எர்டோகனுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் செல்வாக்கு உள்ளது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசாங்கத்தை நீதிமன்றம் மூலம் கலைக்க எதிர்க்கட்சி கள் முயற்சிக்கின்றன என்று எர்டோகன் குற்றம் சாட்டி உள்ளார். சென்ற வருடம் பிரதமர் எர்டோகன், குல் என்பவரை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக தேர்ந் தெடுக்க முயற்சித்தவுடன், துருக்கி ராணுவம், அரசாங்கத்தை கைப்பற்ற நினைத்தது, உடனே எர்டோகன் மக்கள வைக்கு முன்னதாக தேர்தல் நடத்த உத்தரவிட்டார். கடந்த நாற்பது ஆண்டு களில் கண்டிராத அளவிற்கு, மகத்தான வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலும் நடந்து, குல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த ஒரு வருடமாக ஐரோப்பிய நாகரீகத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் வசதி படைத்த முஸ்­ம்கள், துருக்கியில் உள்ள உயர் அதிகாரிகள் ஒரு பக்கமாக வும், இஸ்லாமிய மார்க்க பழக்கவழக்கங் களை பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை கொண்ட, தற்போது பிரதமராக இருக்கும் எர்டோகன் கட்சியான ''நீதியும் வளர்ச்சியும்'' மறுபக்கமும் செயல்பட்டு வருகின்றன. துருக்கி மக்கள் எர்டோகன் கட்சிக்கு மகத்தான ஆதரவு அளித்து வருவது, உலக முஸ்­ம்களை மகிழ்ச்சி யில் ஆழத்தி உள்ளது.

பொருளாதார வளர்ச்சி :

கடந்த மூன்று ஆண்டுகளில் துருக்கியின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 2007லில் ஆறு சதவீதமாக இருந்தது. வெளிநாட்டு முதலீடு 2007லில், 100 பில்­யன் டாலராக இருந்தது. கோல்டுமென் சாக்ஸ் முதலீடு வங்கி துருக்கி நாட்டிற்கு பதினோறாவது இடத்தை அளித்து உள்ளது. 2002ல் துருக்கியில் 5500 வெளிநாட்டு நிறுவனங் கள் இருந்தன. இன்று துருக்கியில் 17000 வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. துணிமணிகள், சிராமிக்ஸ், கிளாஸ், கப்பல் கட்டுதல், இரும்பு உற்பத்தி, ஆபரண நகைகள் கட்டுமான தொழில்களில் உலகில் முதல் பத்து நாடுகளின் வரிசை யில் துருக்கி இருக்கிறது. துருக்கியில் 40,000 ஏற்றுமதியாளர்கள் இருக்கிறார் கள். உலக வங்கியின் 2008 வருடாந்திர அறிக்கையில், துருக்கி நாட்டிற்கு 57வது இடத்தை அளித்துள்ளது. துருக்கியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மத்திய ஆசியாவில் பல நாடுகளில் முதலீடு செய்துள்ளன.

நிலையான ஆட்சி :

துருக்கியில் சென்ற ஆண்டு பொதுத் தேர்தலும் அதிபர் தேர்தலும் நடந்தன. பல ஆண்டுகளுக்கு பிறகு துருக்கியில் தனிக் கட்சி ஆட்சியை பிடித்து நிலையான அரசாங்கம் அமைந்துள்ளது. இந்த நிலையான ஆட்சியின் மூலம் பிரதமர் எர்டோகன் துருக்கி மக்களின் பொருளாதாரம் சமூக வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முன் வந்துள்ளார். தொலை தொடர்புத்துறை, கல்வித்துறை, நீதித்துறை முத­யவற்றை நவீனப்படுத்த முன்னு ரிமை கொடுக்கின்றார். துருக்கியில் உள்ள தொழிலாளர்கள் திறன் மிக்கவர்கள். தொழில் நுட்ப கலைஞர்களை பெருக்குவதற்கான வழிவகைகளை இப்போது உள்ள அரசாங்கம் செய்து வருகிறது. பொருளாதாரத்தில் நிலையான தன்மையை ஏற்படுத்தி வேகமான வளர்ச்சியை அடைய முற்படுகின்றது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் துருக்கியின் தனி நபர் வருமானம் பத்தாயிரம் டாலராக அடைவதற்கு குறியீடு அமைத்துள்ளது. இதைப்போல் துருக்கியின் ஏற்றுமதி 200 மில்­யன் டாலராக அடைவதற்கு குறியீடு நிர்ணயித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் :

ஐரோப்பிய யூனியனில் துருக்கி சேர்ந்து கொண்டால். துருக்கி நாட்டிற்கு பொருளாதார பயன்கள் கிடைக்கும். துருக்கியி­ருந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு வியாபாரம் தங்குதடையின்றி நடைபெறும். இதன் மூலம் வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் தொடர்பு ஏற்படுட்டு தங்களுடைய பொருளாதார வளர்ச்சியையும் மேம் படுத்த உதவும். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளும் துருக்கியின் முக்கியத்துவத்தை உணர்கின்றன. முழு உறுப்பினர் ஆவதற்கு பத்து பதினைந்து ஆண்டுகள் கூட ஆகலாம். துருக்கி ஐரோப்பியா யூனியனில் உறுப்பினராகிவிட்டால் பலரின் நீண்டநாள் கனவு நிஜமாகி விடும். இதில் உறுப்பினர் ஆவதற்கு துருக்கி மக்களின் வாழ்க்கை தரம் ஐரோப்பிய மக்களின் வாழ்க்கை தரத்திற்கு ஈடாக இருக்க வேண்டும். இதனால் துருக்கி அரசாங்கம் பல பொருளாதார சமூக வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. அதே சமயம் துருக்கி மக்கள் இஸ்லாமிய கொள்கைகளை விட்டுவிடுவதற்கு தயாராக இல்லை என்பதை பல காலகட்டங்களில் காட்டி இருக்கின்றனர். உதாரணமாக போஸ்னியா, மான்டி நெக்ரோ, ஈராக், சோமா­யா, ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் முஸ்­ம்களுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம், முஸ்­ம்களுக்கு ஆதரவாக துருக்கி அரசாங்கமும் அதன் மக்களும் குரல் கொடுத் திருக்கின்றனர். இது போன்ற நேரங்களில் ஐரோப்பாவில் உள்ள நாடுகள் கிருஸ்தவ மக்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகள். முஸ்­ம்களுக்கு பல நாடுகளில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம், இந்த நாடுகள் தலையிடாமல் அல்லது எதிராக நடந்து கொண்டதை இங்கே குறிப்பிடலாம்.

துருக்கி - இந்திய வியாபாரம் :

சென்ற மாதம் துருக்கி வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் குர்சத் தர்மன் இந்தியாவிற்கு வந்திருந்தார். இந்தியாவிற்கும் துருக்கி நாட்டிற்கும் வியாபாரம் பெருகுவதற்கும் பல வாய்ப்புகள் உள்ளதை எடுத்துக் கூறினார். இரு நாடுகளும் பல வருடங்களாக நட்புடன் இருந்து வருகிறது. இரு நாட்டு வியாபார நிறுவனங்களும் பல துறைகளில் உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு பொருளாதார வளர்ச்சியை பெருக்குவதற்கான வழிவகைகளை எடுத்துக் கூறினார். இந்தியாவிற்கும், துருக்கிக்கும் வியாபார உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பு இல்லாமல் பரஸ்பர பாதுகாப்பு வியாபாரம், முதலீடுகள் மேம்படுவதற்கான வழிவகைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் மத்தியில் இந்திய துருக்கி நாடுகளுக்கான பொருளாதார கமிஷன் சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையே வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெற வழிவகைகள் வகுக்க இருக்கிறது.

ஏற்றுமதி இறக்குமதி :

துருக்கியின் ஏற்றுமதி இறக்குமதியில் இந்தியா முக்கியமான பங்கு வகிக்கின்றது. 2007லில் துருக்கியில் இருந்து 347 மில்­யன் டாலர்கள் மதிப்புள்ள பொருள் களை இந்தியாவிற்கு துருக்கி ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவி­ருந்து 2.30 பில்­யன் டாலர்கள் மதிப்புள்ள பொருள்கள் துருக்கிக்கு ஏற்றுமதியாகி உள்ளன. ஆசியா பசிபிக் மண்டலத்தில் துருக்கி இந்தியாவுடனான வர்த்தகம் நான்காவது இடத்தில் உள்ளது. இரும்பு, எஃகு, தாது பொருள்களும், வாகன உதிரி பாகங்களும், நிலக்கரியும், துருக்கியி­ருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி யாகின்றன. பருத்தி, பருத்தி நூல், பா­யஸ்டர், பெட்ரோ ­யம் என பல ரசாயன பொருள்களும் இந்தியாவி ­ருந்து துருக்கிக்கு ஏற்றுமதியாகின்றன. இந்தியாவும் துருக்கியும் கூட்டு சேர்ந்து பல தொழிற்சாலைகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.

துருக்கியில் உள்ள கட்டுமான தொழில் ஒப்பந்தக்காரர் கள் 70 வெளிநாடுகளுக்கு சென்று 4,200 திட்டங்களில் ஈடுபட்டு அதனுடைய மதிப்பு 100 பில்­யன் டாலராக உள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அடுத்தப்படி யாக துருக்கியின் ஒப்பந்தக் காரர்கள் கட்டுமானத் தொழி­ல் உலகின் மூன்றாவது இடத்தில் இருக்கின்ற னர். துருக்கியில் உள்ள ஒப்பந்தக்காரரர்கள் இந்தியாவில் உள்ள கப்பல் துறைமுகங்கள், விமானத்தளங்கள், தொலைத்தொடர்பு துறைகள் என 500 பில்­யன் டாலர் மதிப்புள்ள திட்டங்களில் ஈடுபட இருக்கின்றனர். 2007லில் இந்தியாவி­ருந்து 45,000 சுற்றுலா பயணிகள் துருக்கிக்கு சென்று வந்துள்ளனர்.

"நாங்கள் பயங்கரவாத்தை ஆதரிப்பதில்லை" - MNP தலைவர் ஜின்னா அறிக்கை

"நாங்கள் பயங்கரவாத்தை ஆதரிப்பதில்லை" - MNP தலைவர் ஜின்னா அறிக்கை
தமிழகத்தில் முஸ்லிம்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்துவது குற்றமா?
மனித நீதிப் பாசறை மாநிலத் தலைவர் கேள்வி


இன்றைய (25.05.2008) தினமலர் நாளிதழில் 2ம் பக்கம் ""தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி'' பின்னணி குறித்து போலீசார் விசாரனை'' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி குறித்தும், தொடர்நது தினமலர் நாளிதழ் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்ச் செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கி வருவது குறித்தும் கண்டனம் தெறிவித்து மனித நீதிப் பாசறையின் மாநிலத் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா அவர்கள் அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளார்கள் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:


திரு. முகம்மது அலி ஜின்னா அவர்கள்

25.05.2008 அன்று தங்கள் தினமலர் நாளிதழில் 2ம் பக்கம் ""தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி'' பின்னணி குறித்து போலீசார் விசாரனை'' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டதாகவும் முஸ்லிம் விரோதப் போக்குடனும் அமைந்துள்ளது மனித நீதிப் பாசறைக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது.மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் தேசிய இயக்கமான ""பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா'' சார்பாக எதிர்வரும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

தமிழகத்தில் மட்டுமல்ல; பாப்புலர் ஃபிμண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இந்த சுதந்திμதின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது.தமிழகத்தில் அதற்கான அணிவகுப்பு பயிற்சி மற்றும் ஒத்திகைகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றோம். ஆனால் அது போலீஸுக்கு இணையான அணிவகுப்பு பயிற்சி அல்ல.மேலும் தமிழக வீதிகள் முழுவதும் இந்த சுதந்திμதிக் அணிவகுப்பு சுவர் விளம்பμம் செய்து வருகின்றோம். காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இது குறித்து அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளோம்.இந்நிலையில் தங்கள் நாளிதழில் எங்கள் அமைப்பின் சுதந்திμதின அணிவகுப்பு பயிற்சி குறித்தும் எங்கள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் தவறாகவும், அவதூறாகவும் உண்øமக்குப் புறம்பாகவும் எழுதியிருப்பது பத்திரிகை தர்மத்திற்கு எதிரானதாகும். அதுமட்டுமின்றி முஸ்லிம்களின் சுதந்திர உணர்வை களங்கப்படுத்தும் செயலாகும்.


நமது தேசத்தின் சுதந்திரம் என்பது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடிப் பெற்ற சுதந்திμம். 1757ம் ஆண்டு வங்காளத்தில் சிராஜ் உத் தவ்லா முதல் 1947ம் ஆண்டு வரை இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தி இருக்கிறார்கள் முஸ்லிம்கள். 1947ம் ஆண்டு நமது தேசம் விடுதலையடைந்தபோது இருந்த முஸ்லிம்களின் ஜனத் தொகையைவிட 2 மடங்கு முஸ்லிம்கள் இந்த சுதந்திர போரில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கின்றார்கள்.

சுதந்திரமடைந்த 60 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை வரலாற்றின் வீர வடுக்களிலிருந்து முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றார்கள். போராடிப்பெற்ற சுதந்திμத்தில் முஸ்லிம்களின் உரிமையைப் பறைசாற்றும் விதமாகவும், இந்துக்களுடன் இணைந்து போராடிய ஒற்றுமையை நிலைநிறுத்தும் முகமாகவும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது. நாங்கள் எப்பொழுதும் வெளிப்படையான அமைப்பு தான். எங்களிடம் எந்த திரைமறைவுமில்லை. பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பதும் இல்லை. மேலும் ஆள்கடத்தல், ஆயுதம் பதுக்கல் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதாக எங்கள் இயக்கத்தினர் மீது கடலூர் போலீசில் சில ஆண்டுகளுக்கு முன் வழக்குப் பதிவாகியுள்ளதாக தாங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் பொய்யானதாகும்.

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நடத்தும் அணிவகுப்பை பயங்கμவாதக் கண்கொண்டு பார்க்காத உளவுத்துறையினர், மனித நீதிப் பாசறையின் அணிவகுப்பு ஒத்திகையை சீர்குலைக்க இதுபோன்ற தவறான செய்திகளை பத்திரிகைகளுக்கு வழங்குவது அவர்களுடைய துவேஷ சிந்தனையைத் தெளிவாகக் காட்டுகின்றது. இதுபோன்று சட்ட ஒழுங்கையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் விதமாகவும், பாரபட்சமாக துவேஷ சிந்தனையுடனும் செயல்பட்டு வரும் காவல்துறை மற்றும் உளவுத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை இனங்கண்டு அவர்களைக் களையெடுக்க வேண்டுமென தமிழக அμணிச மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கின்றது. ""இந்தியாவில் முஸ்லிமாக வாழ்வது தண்டனைக்குரிய குற்றமா? என்று கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. பிருந்தா கரத் அவர்கள் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வியை மனித நீதிப்பாசறை இன்று மக்கள் மன்றத்தில் கேட்கின்றது. என்று மனித நீதிப் பாசறை சார்பாக அதன் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக வலையில் முஸ்லிம்கள்

இஸ்லாமிய இணையப் பேரவையில் வெளிவந்துள்ள கட்டுரை. மேலும் பல கட்டுரைகள் படிப்பதற்கு இஸ்லாமிய இணையப் பேரவையின் இணையத் தளத்திற்கு (http://www.iiponline.org/) சென்று படியுங்கள்.

ஊடக வலையில் முஸ்லிம்கள்

பெரும்பாலான மக்களை ஒரே நேரத்தில் சென்றடைவதிலும் மேலும் அதன் தாக்கத்தை உடன் ஏற்படுத்துவதிலும் ஊடகங்கள் இன்று பெரும் பங்கை வகிக்கிறது. இன்று உலகம் அறிவியலில் வெற்றி இலக்கை நோக்கி வெகுவாக முன்னேறிகொண்டுருக்கிறது. செய்தி ஊடகங்கள் என்பது இணையத்தில் மட்டுமில்லை. வானொலி, தொலைக்காட்சி, தினசரி, வாரம், மாதப்பத்திரிகைகளாகவும், பல துறைகளைப் பற்றிய செய்தித் தொகுப்பாகவும் மற்றும் தனி மனிதர்களின் புத்தக வெளியீடாகவும் விரிவடைந்து ஆழமாக தன் வேர்களைப் பாய்ச்சியுள்ளது. தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம், அச்சு ஊடகத்துறை மற்றும் மின்னணு ஊடகத்துறை என்று எல்லாத் துறைகளிலும் விஞ்ஞானம் கொடிகட்டிப் பறக்கும் சாதனை உலகில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே சுற்றி வளைத்து உங்கள் விரல் நுனியில் தந்துள்ளது ஊடகத்தின் உச்சானி கொம்பாக இருக்கின்ற இணையதளம். கல்வி, வியாபாரம், வர்த்தகம், விளம்பரம், தகவல் தொடர்பு, வேலைவாய்ப்பு, மருத்துவம், இராணுவம் மற்றும் ஆராய்சி என பல்வேறு துறைகளில் தனது ஆதிக்கத்தை முழுவீச்சுடன் செலுத்தியுள்ளது.

இன்று ஊடகத்தின் வளர்ச்சி எல்லோருக்கும் கிடைக்கும்படியும் அமைந்துவிட்டது, சிறிது தொழில்நுட்பம் தெரிந்தால் கூட நமது கருத்துக்களை உலகத்தின் பலபாகங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும். ஆனால் இஸ்லாமிய சமுதாயம் ஊடகவலையில் இன்னும் உறங்கி கொண்டுதான் இருக்கிறது. இதனால இஸ்லாம் பல கோணங்களில் தவறாக பரப்பப் படுகிறது, மேலும் கலங்கப்படுத்தபடுகிறது, காரணம் இன்று ஊடகம் ஆதிக்க சக்திகளாலும் பாசிசத்தாலும் ஆக்கிரகிக்கப்பட்டுள்ளது.

ஊடகத் துறையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறித்து இதுவரை வெளியிடப்பட்ட அறிக்கையில் ஊடகத் துறையின் முக்கியப் பொறுப்புகளில் வெறும் 3 சதவிகிதம் முஸ்லிம்களே உள்ளனர். ஆனால், மக்கள் தொகையில் 3 சதவிகிதம் இருக்கும் பார்ப்பனர்களோ இத்துறையில் 49 சதவிகிதம் இருக்கின்றனர். ஆதிக்கவாதிகள் நிரம்பி வழியும் ஊடகங்கள் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை ஒரு பிரச்சாரமாகவே மேற்கொண்டு வருகின்றன. ‘முஸ்லிம்கள் அழித்தொழிக்கப்பட வேண்டிய தீவிரவாதிகள்' என்ற மதவெறிக் கருத்தை இவை வெளிப்படையாக மக்களிடையே பரப்புகின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கு மக்கள் தொகையாக முஸ்லிம்கள் இருந்தும் சொல்லிக் கொள்கிற மாதிரி செய்தி ஊடகங்களில் முஸ்லிம்கள் முன்னேற முடியாமல் மூலையில் முடங்கிக்கிடக்கிறார்கள். கல்வியில் முன்னேறாத சமுதாய மக்களாக முஸ்லிம்கள் இருக்கும் போது, ஊடகங்களில் எப்படி முன்னேற முடியும்? மாற்றார்களால் முஸ்லிம்கள் தவறாக சித்தரிக்கப்படும் போது அதே மீடியாவைக்கொண்டு பதில் தாக்குதல் எப்படிக் கொடுக்கமுடியும்.

இஸ்லாத்திற்கு எதிரான பனிப்போர் மிகவும் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது, குறிப்பாக மேற்கத்தியர்களும் மற்றும் அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக் கொள்பவர்களும் இஸ்லாத்திற்கெதிரான கருத்துப்போரில் முழுவீச்சுடன் செயல்படுகின்றனர். அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களையும் செய்தி படிப்பவர்களையும் இந்த மீடியா முஸ்லிம்கள் தீவிரவாதிகள்தான் என நம்ப வைத்திருக்கிறது. நாளொரு வண்ணமும் பொழுதொரு செய்தியுமாக முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் தொலைகாட்சி பார்ப்பவர்களையும் செய்திப்படிப்பவர்களையும் இவ்வலைக்குள் சுலபமாக விழ வைத்திருக்கிறார்கள்.

ஒரு புள்ளிவிபரத்தின் படி ஒரு அமெரிக்கக் குடிமகன் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்றே முக்கால் மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறான். 65 ஆண்டு கால உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒன்பது ஆண்டுகாலம் தன் வாழ்க்கையை தொலைக்காட்சியை பார்ப்பதில் கழிக்கிறான். அமெரிக்காவில் கணிசமான குழந்தைகள் சராசரியாக வாரம் ஒன்றிற்கு 25 மணிநேரம் தொலைக்காட்சி பார்ப்பதாக சி.என்.என் ஹெல்த் நியூஸ் குறிப்பிடுகிறது.

ஒரு பக்கம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற ஊடகம், இன்னொரு பக்கம் தீவிரவாதிகளை சமூக சேவகர்களாக அங்கீகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், தீவிரவாதிகள், பிற்போக்கு வாதிகள் என்றும் பாசிசவாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதனையே உலக அளவில் அமெரிக்காவும், பிரிட்டனும் சி.என்.என், பி.பி.சி போன்றவற்றின் உதவியுடன் முன்வைக்கிறது.

மாற்றான் தவறு செய்தால் அத்தவறுகளை அவனளவிலும், ஒரு முஸ்லிம் தவறு செய்துவிட்டால் இஸ்லாம் அவ்வாறு பயிற்சிவிக்கிறது போன்ற பிம்பத்தை உண்டாக்க "முஸ்லிம் தீவிரவாதிகள்", "இஸ்லாமிய அடிப்படைவாதிகள்" என்று போற்றுவது இவர்களுக்கு கைவந்த கலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் திணற அடித்து, 'சரணடைய மாட்டேன்' சாவை சலனமின்றி ஏற்றுக் கொள்வேன்' என்று நெஞ்சுயர்த்தி நின்று தன் உயிரைத் தந்த உண்மை வீரன் தியாகி திப்பு சுல்தானின் பெயர் இந்திய இளைய தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும்படி செய்கிறார்கள்.ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்து இந்தியர்களைக் காட்டிக்கொடுத்த துரோகிகள் தியாகிகள் எனப்போற்றப் படுகிறார்கள் ஊடகங்களால்.

திரைப்படங்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லிமா.. எல்லா இடத்திலேயும் கலவரங்களைத் தூண்டுபவன், பாகிஸ்தானுக்கு உளவாளி, தீவிரவாதி என்று இரண்டரை மணிநேரத்தில் எப்படியெல்லாம் முஸ்லிம் சமுதாயத்தின் மேல்அவதூறான களங்கத்தைச் சுமத்திச் சென்றுவிடுகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றோமா?

பர்தா பாதுகாப்பு என்கிறது இஸ்லாம். இல்லை பழமைவாதம் என்கிறார்கள் எதிரிகள். நாம் உண்டு நமது வேலை உண்டு என்றிருந்தால் ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துப்போரில் வாள் வீசுவது யார்? சற்று சிந்தனை செய்யவேண்டாமா? இன்று ஊடகத்துறையில் முஸ்லிம்களுக்கெதிரான அவர்கள் செய்யும் பனிப்போரில் உச்சகட்டத்தை அடைந்துயிருக்கின்றார்கள் என்றால் யார் காரணம்? நாமல்லவா சகோதரர்களே! இப்போதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் பயங்கரவாதம் தொடர்பான செய்திகள் அடிக்கடி வந்துகொண்டு இருக்கின்றன. 9/11 நிகழ்வுகளுக்கு பின்பு இஸ்லாம் பயங்கரவாதம் என்கின்ற ஒரு தவறுதலான கருத்தாக்கம் ஊடகங்கள் மூலமாகப் பரப்பப்பட்டு வருகின்றது. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்தைப் பரப்புவதில் யூத, அமெரிக்க அமைப்புகளும் இந்தியாவில் மதவெறியர்களின் கைப்பாவையாகச் செயல்படும் சில ஊடகங்களும் முழு மூச்சாக இயங்குகின்றன. தற்கொலைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள், பணயக் கைதிகள் கொல்லப்படுவது போன்ற வெறிச்செயல்களை மத அடிப்படையிலும், மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் எந்த முஸ்லீமும் ஏற்றுக்கொள்வதில்லை. உலக வர்த்தகமையக் கட்டடத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களாகட்டும், இஸ்ரேலின் இயந்திரத் துப்பாக்கிக்கு பலியாகும் பாலஸ்தீனர்களாகட்டும், பாதுகாப்புப் படைகளால் கொல்லப்படும் காஷ்மீரியாகட்டும், வான் தாக்குதல்களில் கொல்லப்படும் ஈராக் முஸ்லிம் ஆகட்டும், வேதனையும் மரணமும் எல்லோருக்கும் ஒன்றுதான். ஊடகங்களும் இது போன்ற செய்திகளை பெரிய அளவில் பிரபலப் படுத்துவதும் இந்த வழக்குகளில் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்வதும் நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிகழ்வுகளாக உள்ளன.

இன்று நம் நாட்டில் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளில் நடக்கும் வன்செயல்கள், அராஜகங்கள், தீவிரவாத செயல்கள், மனித நேயத்திற்கு முரணான செயல்கள் இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். முஸ்லிம்கள் மட்டும்தான் அச்செயல்களில் ஈடுபடுகிறார்களா? இல்லையே! ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து இன, மத மக்களிலும் இப்படியொரு அராஜாக - மிருகவெறி கொண்ட கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்த, ஒரு உண்மை முஸ்லிம் இப்படிப்பட்ட அராஜக செயல்களில் ஒரு போதும் ஈடுபடமாட்டார். தற்கொலை செய்து கொண்டு தன்னை மீளா நரகில் கொண்டு சேர்க்க ஒரு போதும் முற்படமாட்டார். தீமையை தீமையைக் கொண்டு தடுக்க முடியும் என்று அல்குர்ஆன் சொல்லவில்லை. தீமைகளை நன்மைகளைக் கொண்டே முறியடியுங்கள் என்றே குர்ஆன் போதிக்கிறது.

சோவியத் கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு இஸ்லாமே பெரிய எதிரியாகத் தெரிகிறது. காரணம் அங்கெல்லாம் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகிறது. இஸ்லாம் தங்கள் நாடுகளை ஆட்கொண்டு விடுமோ என அஞ்சுகிறார்கள். எனவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டைப் போட வேண்டும் என்ற தீய நோக்கோடு, அனைத்து ஊடகங்களும் அமெரிக்க, யூத பணத்திற்கு அடிமையாகி அவர்கள் கொடுக்கும் செய்திகளை அப்படியே மாறி மாறி ஊடகத்தின் மூலமாக பரப்பி வருகின்றன.

ஆனால் என்ன செய்வது, அறிவின் பிறப்பிடமான இஸ்லாமிய மக்களுக்கு கல்வியே இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதற்கு வறுமையும் மிகப்பெரிய எதிரியாக உள்ளது, இந்த வறுமையை போக்கக்கூடிய இடஒதுக்கீடும் பாசிசத்திற்கு எதிராக உள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 44 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர். மற்ற சமூகங்களை சார்ந்தவர்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே இந்த நிலையில் உள்ளனர்.

மனித சமூகத்தை நாகரிகப்படுத்துவதும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதுமான கல்வித் தகுதியில், முஸ்லிம்கள் மிக மிகப் பின் தங்கியுள்ளனர். 1965 இல் 72 சதவிகிதமாக இருந்த நகர்ப்புற முஸ்லிம் மாணவர் சேர்க்கை 2001 இல் 80 சதவிகிதமாகியிருக்கிறது. ஆனால், நகர்ப்புற தலித் மாணவர்களின் எண்ணிக்கையோ 90 சதமாக உயர்ந்திருக்கிறது. 36 ஆண்டுகளில், கிராமப்புற, நகர்ப்புற, ஆண்-பெண் என எந்தப் பிரிவை எடுத்துப் பார்த்தாலும் முஸ்லிம்களிடையே கல்விப் புரட்சி என எதுவும் ஏற்படவில்லை. கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகம், மற்ற துறைகளில் எப்படி வளர்ச்சி அடையும்? பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களுக்கெதிரான பாரபட்சங்கள் ஒருபுறமும், வறுமையில் உழலும் குடும்பச் சூழல் மறுபுறமும் சேர்ந்து பள்ளிக் கல்வியைக்கூட முடிக்க முடியாத அவல நிலைக்கு முஸ்லிம்களைத் தள்ளிவிட்டது. பள்ளியில் எழுபது சதவிகிதம் மாணவர் சேர்க்கையில், 11.6 சதவிகிதம்பேர் பாதியிலேயே படிப்பைக் கைவிடுகின்றனர். 3 சதவிகித பட்டதாரிகளையும், 1.2 சதவிகிதம் மட்டுமே பட்ட மேற்படிப்பை முடித்தவர்களையும் கொண்டிருக்கிறது, இந்தியாவின் மிகப் பெரிய சிறுபான்மைச் சமூகம் அடிப்படைக் கல்வியில் இத்தகைய சரிவு ஏற்படுவதாலேயே அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் உள்ள 50 சதவிகிதம் இடஒதுக்கீட்டைக் கூட நிரப்ப முடியவில்லை. 94.9 சதவிகித முஸ்லிம்கள் அன்றாடம் உணவுக்கே அல்லல்படுகின்றனர். படிப்புதான் இல்லை, சுயதொழில் செய்யலாம் என வங்கிகளில் கடன் கேட்டால், முஸ்லிம்களுக்கு கடன் கொடுக்க அவை முன் வருவதில்லை. இதுவரை வெறும் 3.2 சதவிகிதம் பேருக்குதான் வங்கிக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் 60.2 சதவிகிதம் பேருக்கு நிலங்கள் இல்லை. நிலமற்றவர்கள் கூலிகளாக இருப்பதும், கூலிகள் வறுமையில் உழல்வதும், வறுமை கல்வியைத் தடுப்பதும், கல்வித் தடை மற்ற எல்லா வளர்ச்சிகளையும் முடக்கிப் போடுவதும்தானே இயற்கை! எமக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது.

மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த சதவிகிதமே அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அதாவது, வெறும் 4.2 சதவிகிதம்தான். பீகாரிலும் உத்திரப்பிரதேசத்திலும் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப மூன்றில் ஒரு பங்குகூட, அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. கர்நாடகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12.2 சதவிகிதமாக இருப்பினும், அரசு வேலைகளில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் 8.5 சதவிகிதம்தான் உள்ளது. குஜராத்தில் 9.1 சதவிகிதம் மக்கள் தொகைக்கு அளிக்கப்பட்டுள்ள பங்கு 5.4 சதவிகிதம் மட்டுமே. சிறுபான்மையினச் சகோதரர்கள் என வாயாற அழைத்தே ஆட்சியை மாறி மாறிப் பிடிக்கும் தமிழகத்திலோ 5.6 சதவிகிதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால் வெறும் 3.2 சதவிகிதம் பிரதிநிதித்துவமே உள்ளது. எல்லா மாநிலங்களிலும் நிலைமை இதேதான்.

முஸ்லிம்கள் உயர் பதவிகளில், மேற்கு வங்கத்தில் பூஜ்யம். மற்ற மாநிலங்களில் பாதிக்குப் பாதி என்ற அடிப்படையில்கூட முஸ்லிம்களின் பங்களிப்பில்லை முஸ்லிம்கள் அதிகமுள்ள 12 மாநிலங்களில் நீதித்துறையில் வெறும் 7.8 சதவிகிதம்தான் உள்ளனர். மக்கள் தொகையில் 66.97 சதவிகித முஸ்லிம்களைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில்கூட, 48.3 சதவிகித பிரதிநிதித்துவமே நீதித்துறையில் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முஸ்லிம் நீதிபதியையோ, வழக்கறிஞரையோ அவர்களின் பதவியைக் கொண்டு பார்க்காமல் முஸ்லிமாகப் பார்க்கவே இச்சமூகம் தலைபடுகிறது. மதக்கலவரங்களை விசாரிக்க இதுவரை ஒரு முஸ்லிம் நீதிபதிகூட நியமிக்கப்பட்டதில்லை. காரணம், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைத்தான் ஆதரிப்பார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை. இதுதான் பாரபட்சத்தின் ஆணிவேர். வகுப்புவாதிகள் எல்லோரும் நீதிமான்கள் என்பது போலவும், முஸ்லிம்கள் மட்டும் மதவெறியர்கள் என்பது போலவும் ஒரு மோசமான கருத்து இங்கு விதைத்து வளர்க்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதிகளவில் முஸ்லிம்கள் ‘குற்றவாளி'களாகவும், பாசிசவாதிகள் ‘நீதிமான்'களாகவும் உள்ளனர்.

இவ்வாறு இஸ்லாமிய மக்கள் வறுமையிலும் கல்வியிலும் மிகவும் தாழ்வு நிலைமையில் இருக்க இதற்கு மருந்தாக இருக்கக்கூடிய இடஒதுக்கீட்டையும் கிடைக்கவிடாமல் எதிர்க்கிறது மனித வடிவில் மிருகமாக இருக்கிற பாசிசம். அவ்வாறுயிருக்கையில் எவ்வாறு இஸ்லாமிய சமூகம் ஊடகத்துறையிலும், மற்ற ஏனய துறையிலும் முன்னேற முடியும். ஆனால் முஸ்லிம்கள் அனைவரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்கின்ற மாயத்தோற்றத்தை பாசிச சக்திகள் மக்கள் மத்தியில் பரப்பிவருகிறார்கள்.

ஒரு நாட்டின் இறையாண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால், அந்த நாட்டின் அரசு, அரசு அதிகாரிகள், நீதித்துறை, ஊடகங்கள் இந்த நான்கும் நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலையோடும் செயல்பட வேண்டும். இந்த நான்கும் நிலைகுழைந்தால் நாட்டில் கற்பழிப்பு, திருட்டு, கொள்ளை, கொலை, வன்முறை, தீவிரவாதம் என அனைத்து அராஜகங்களும், பஞ்சமா பாவங்களும் தலைதூக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று இந்த நான்கு தூண்களும் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் அடிமையாகிக் கிடக்கின்றன.

இல்லாததைத் திரும்ப திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அதை இருப்பதாக மக்கள் நம்பி விடுவார்கள். இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம், முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என திரும்பத் திரும்ப எதிரிகள் செய்தி ஊடகங்கள் வழியாக மக்கள் முன் வைக்கிறார்கள். துரதிஷ்டம், இதை எதிர்த்து தக்கப் பதிலடி கொடுப்பதற்கு சொல்லிக் கொள்கிற மாதிரி பிரபல்யமான மீடியா என்று முஸ்லிம்களிடம் எதுவுமில்லை. யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி அங்கொன்று, இங்கொன்றாக பத்திரிகை மீடியா, அதுவும் முஸ்லிம்களுக்குள்ளேயே தான் செய்தி ஊடுருகிறதே தவிர, மீடியா வழியாக இஸ்லாத்தின் மீது எதிரிகள் விதைக்கும் விஷக் கருத்துக்குத் தக்க பதிலாக, இஸ்லாத்தைப் பற்றிய அவதூறைத் துடைக்கும் நோக்கில் முஸ்லிம் அல்லாத மக்களுக்கு செய்திகளைச் சேர்க்கும் பரந்த, வலுவான மீடியா என்பது இல்லை. இஸ்லாத்தை படித்தவர்கள் மீடியாவுக்கு வருவதில்லை. இஸ்லாத்தைப்பற்றி வாய்வழியாக பிறருக்கு சொன்னால் போதும் என்கின்ற மனநிலையில் பெரும்பான்மையினர் ஒதுங்கிவிடுகின்றனர்.

இப்படியிருக்கையில் இன்னும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நம் சமூகத்தை இந்த அழிவு பாதையிலிருந்து பாதுகாப்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கும். ஆகவே நாம் இதிலிருந்து விரைவில் விழித்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படக்கூடிய மிகக் கட்டாய காலகட்டத்தில் இருக்கிறோம்.இதற்கு எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவனாக!


ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள(போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை.குர்ஆன் (8:53)

Thanks : முகவைத்தமிழன்

உலக நாடுகளை கவரும் "அல் ஜஸீரா" தொலைக்காட்சி

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

உலக நாடுகளை கவரும் "அல் ஜஸீரா" தொலைக்காட்சி
நிறுவன சேவைகள்


ஆதிக்கசக்திகள் ஊடகத்துறைக்குள் புகுந்து எந்தெந்த அளவில் பொய்களை புகுத்த வேண்டுமோ அந்தெந்த அளவில் பொய் செய்திகளை புகுத்தி மக்களிடம் உண்மைகளை மறைத்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இஸ்லாத்திற்கு ஏதிராக ஆதிக்கச்சக்திகள் பரப்பி விடும் பல பொய் செய்திகள் உலக மக்களிடம் எடுபடவில்லை. பொய்ப்பிரச்சாரங்கள், பொய் செய்திகள், நேர் ஏதிரான கருத்துக்களை மட்டுமே பரப்பி வரும் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பல ஆதிக்கச்சக்திகள் சொல்லும் செய்திகளை மட்டுமே ஒளி ஒலிப்பரப்பி வருகின்றன.

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பாக, டோஹா கத்தார் நாட்டில் துவங்கப்பட்ட “அல்ஜஸீரா” தொலைக்காட்சி நிறுவனமானது மற்ற தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முன்னோடியாக விளக்குகிறது என்றால் மிகையாகாது. ஆரம்பத்தில் அரேபிய மொழியில் மட்டுமே துவங்கப்பட்ட இதன் செய்தி நிகழ்ச்சிகளானது அதிகமான மக்களை கவர்ந்து விட்டது.

ஈராக் ஆக்கிரப்புக்குப்பின் அந்நாட்டில் ஆதிக்கக்சக்திகள் என்ன கொடுமைகளை நடத்தின, ஆப்கானிஸ்தான் நாட்டில் எத்தகைய இன்னல்களை அங்குள்ள பொது மக்கள் அனுபவித்தனர். பாலஸ்தீன நாட்டின் உண்மை நிலை என்ன போன்ற தகவல்களை உடனுக்குடன் படம் பிடித்து உண்மையான தகவல்களை மக்களிடம் தரும் பணியினை செம்மையாக செய்து வருகிறது. ஆகையால் உலக மக்களின் நன் மதிப்பினை அல்ஜஸீரா தொலைக்காட்சியானது பெற்றுக்கொண்டு வருகிறது. அதனை பிடிக்காத ஆதிக்கச்சக்திகள் இந்நிறுவனத்திற்கு ஏதிராக பல எதிர்ப்புகளை காட்டியது. அந்த எதிர்ப்புக்கிடையே அல்ஜஸீராவின் வளாச்சியானது, மேன்மேலும் பரவி தற்போது ஆங்கில மொழியில் தன்னுடைய ஒலி ஒளிப்பரப்பினை அமெரிக்கா நாட்டில் துவங்கி விட்டது. BBC – British Broad Casting நிறுவனம் மற்றும் CNN – Net work போன்ற ஆதிக்கச்சக்திகளின் தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திகளை விட அல் ஜஸீராவின் செய்திகளை மக்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள் என்றால் மிகையாகாது.

மே 14.5.2008 புதன் கிழமையன்று, அமெரிக்க நாட்டில் அல் ஜஸீரா தொலைக்காட்சியின் சேவையானது துவங்கபட்டது. அதனுடைய ஆங்கில சேவையின் பொது இயக்குனர் டோனி புர்மன் (Tony Burman – Managing Director of Al Jazeera’s English languages service) அவர்கள் குறிப்பிடுகையில் (இவர் இதற்கு முன்பாக கனடா தகவல் மையத்தின் இயக்குராக பணி புரிந்து ஜீலை 2007 வேலையிலிருந்து நீக்கினார்) அமெரிக்காவில் DISH Net work மூலமாக , இந்நிகழ்ச்சிகளை காணலாம். மற்றும் 160 மில்லியன் இல்லங்களை தேடி அல் ஜஸீரா நிகழ்ச்சியானது செல்ல வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டார். அமெரிக்காவின் பல பகுதிகளிலும் மற்றும் வடக்கு அமெரிக்கா நாடுகளிலும் இதனுடைய ஒலி ஒளிப்பரப்பானது துவங்க பட உள்ளது. அத்துடன் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரான்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து போர்ச்சுகல் மற்றும் ஹங்கெரி நாடுகளிலும் சேவைகள் துவங்கப்பட உள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான வியாட்நாம் நாட்டில் VTC என்ற நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய ஆங்கில சேவையினை அங்கு செய்து வருகிறது. சிஙகப்பூர் நாட்டில் SINGTEL என்ற நிறுவனத்துடன் இணைந்து அங்கு சேவையினை செய்து வருகிறது. மற்றும் ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அல் ஜஸீரா ஆங்கில சேவையானது துவங்கப்பட்டு விட்டது. அல் ஜஸீராவின் அலை வரிசையின் சேவையானது, பிஜி, மாலத்தீவு, மால்டா, நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் சேவையானது உள்ளது.

இணையத்தளம் வாயிலாக மக்களுக்கு உண்மையான செய்திகளை You Tube Video Clip – Sharing site மூலமாக வழங்குகிறது. முதல் ஆண்டு துவங்கத்திலேயே, 21 மில்லியன் மக்கள் இந்த இணையத்தளம் மூலமாக செய்திகளை பார்த்து இருக்கிறார்கள் என்ற தகவலை அல் ஜஸீரா செய்திக்குறிப்பானது கூறுகிறது.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

சவூதிக்கு புதிய இந்தியத் தூதர்

ஜெட்டா: சவூதி அரேபியாவின் ஜெட்டாவுக்கான இந்தியத் தூதராக (Consul General) சயீத் அகமது பாபா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் வரும் ஜூலை 2ம் தேதி ஜெட்டாவில் அவர் பதவியேற்பார்.

1988ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த இவர், மேற்குவங்க மாநிலத்தில் பணியாற்றி வந்தார். தற்போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ்ஸின் தனிச் செயலராக உள்ளார்.

தனது புதிய பதவி குறித்து கருத்து தெரிவித்த சயீத் அகமது, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் யாத்தீரிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவதே என் முதல் நோக்கம் என்றார்.

இந்திய-சவூதி இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார்.

சாலை விபத்தில் மூன்று இந்தியர்கள் உள்பட நான்கு பேர் பலி

துபாய்: ஷார்ஜாவில் நடந்த சாலை விபத்தில் மூன்று இந்தியர்கள் உள்பட நான்கு பேர் பலியானார்கள்.

ஷார்ஜாவில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஒரு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். முக்கியச் சாலை ஒன்றுக்கு வந்த அந்த வேன், எதிர் திசையில், மணல் ஏற்றி வந்த நீண்ட டிரெய்லர் இணைக்கப்பட்ட லாரி வருவதை அறியாமல் சாலையில் நுழைந்தது.

அப்போது மணல் லாரி, தொழிலாளர்கள் இருந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் இரு வாகனங்களும் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டன. மணல் ஏற்றி வந்த டிரெய்லர் லாரி படு வேகமாக வந்ததால் மோதிய வேகத்தில், அதன் பின்புறம் இணைக்கப்பட்டிருந்த டிரெய்லர் கழன்று, தொழிலாளர்கள் இருந்த வாகனத்தின் மீது ஏறி விழுந்து நசுக்கியது.

இதில் அதில் இருந்த மூன்று இந்தியர்களும், ஒரு பாகிஸ்தானிய தொழிலாளியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்த நால்வரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

அரிசி பற்றாகுறை: இந்தியாவை நாடுகிறது சவுதி அரசு

அரிசி பற்றாக்குறையால் தவிக்கும் சவுதி அரேபிய அரசு நிலைமையைச் சமாளிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.

அத்தியாவசிய உணவு விலையேற்றத்தைத் தொடர்ந்து இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பாசுமதி அரிசி தவிர்த்த மற்ற அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. பாசுமதி அரிசி ஏற்றுமதி வரியையும் கடுமையாக உயர்த்தியது.

இதனால் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகளில் கடும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே அதிகமாக அரிசி இறக்குமதி செய்யும் நாடுகளில் 6வது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. ஆண்டுக்கு சராசரி 9,60,000 டன் அரிசியை இறக்குமதி செய்கிறது. இதில் 5,00,000 முதல் 6,00,000 டன் அரிசியை இந்தியாவில் இருந்துமட்டுமே பெறுகிறது. அதன் மொத்த இறக்குமதியில் 70 சதவீதம் இந்தியாவி்ல் இருந்து பெறப்படுகிறது, குறி்பபாக பாசுமதி அரிசி. தாய்லாந்து நாட்டிலிருந்து 10 சதவீத அரிசியை இறக்குமதி செய்கிறது.

இந்தியாவில் சாதா ரக அரிசி மீதான ஏற்றுமதி தடையினால் சவுதியிலும், ஐக்கிய அரபு குடியரசு நாடுகளிலும் தற்போது கடும் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க இந்தியாவின் உதவியை சவுதி அரசு நாடியுள்ளது.

இந்த மாத துவக்கத்தில் சவுதி அரேபியா சென்ற தி்ட்டக்குழு துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவிடம் இந்திய அரிசி ஏற்றுமதி தொடர்பான பிரச்னைகள் பற்றிதான் அந்நாட்டு அரசு முழுக்க விவாதித்தது.
அரிசி சப்ளை செய்வது மற்றும் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு விலக்கு கோருதல் உள்பட பேச்சு நடத்த இந்திய தரப்புக்கு அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அரிசி இறக்குமதி பிரச்னை குறித்து சவுதி தொழில் மற்றும் வர்த்தக சபை நிர்வாகிகள் தொடர்ந்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரக துணை அதிகாரி ராஜிவ் ஷகாரி தெரிவித்தார்.

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்வி உதவித்தொகை அறிவிப்புபி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்நோக்கம் : சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்தகுதி : நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.விதிமுறைகள் :ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல்படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும்.படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும்.படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.அல்லது விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் வந்து சேர கடைசி நாள் செப்டம்பர் 30, 2008 ( முதலாம் ஆண்டு தொழில்நுட்ப படிப்புகள் )ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் )ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )CONTACTB.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATIONBUHARI BUILDING NO 4MOORES ROADCHENNAI 600 006PHONE : 044 4226 1100
www.bsazakaat.org

மாமா வேலை பார்க்காததால் காவல்துறை என்னை கொல்ல பார்க்கின்றது - தவ்ஃபீக்

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லஸ்கர் - இ - தொய்பா வலுவாக கால் ஊன்ற ஆரம்பித்துவிட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாசகார வேலைக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் `இறைவன் ஒருவனே' என்ற அமைப்பு பின்புலமாகச் செயல்படுகிறது. இந்து மதத் தலைவர்களைக் கொல்ல இவர்கள் திட்டமிட்டுள்ளனர்... என்ற ரீதியில் வெளியாகும் தகவல்களும், சென்னையில் பிடிபட்ட மூன்று தீவிரவாதி களிடம் பெறப்பட்ட ஆர்.டி.எக்ஸ் ரக வாக்குமூலங்களும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மே 13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பின், சென்னை மண்ணடி, கொடுங்கையூர் பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பழனி உமர், மேலப்பாளையம் சையது காசிம், மண்ணடி காதர் ஆகியோர் பிடிபட்டனர். இதுபற்றிய தகவல்களை வெளியிட்ட போலீஸார், "தேடுதலில் பிடிபட்டவர்கள் `இறைவன் ஒருவனே' அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதன் தலைவர் தவ்ஃபீக், அபுதாகீர் ஆகியோர் தப்பியோடிவிட்டனர். ரியாத்துக்கு வேலை தேடிச் சென்றபோதுதான் தவ்ஃபீக்குக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. 2002-ம் ஆண்டு லஸ்கர் - இ - தொய்பா அமைப்பில் ஆயுதப் பயிற்சியை எடுத்துக் கொண்டார். ஆந்திராவில் லஸ்கர் - இ - தொய்பா மாநிலத் தலைவர் அப்துல் அஜீஸுடன் சேர்ந்து செயல்பட்டார். ஒரு சண்டையில் அஜீஸ் சுட்டுக் கொல்லப்பட்டதும், சென்னைக்கு வந்து தீவிரவாத வேலைகளைத் தொடங்கினார் தவ்ஃபீக். ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் `இறைவன் ஒருவனே' என்ற அமைப்பிற்கு முக்கியத் தொடர்பிருக்கிறது. தவ்ஃபீக்கைத் தீவிரமாகத் தேடி வருகிறோம்'' எனத் தெரிவித்தனர்.தவ்ஃபீக்கின் மனைவி மர்லியாவும், கடந்த 17-ம் தேதி தமிழக முதலமைச்சர், டி.ஜி.பி ஆகியோருக்கு அனுப்பியுள்ள ஃபேக்ஸ் ஒன்றில் `என் கணவர் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களுக்காக உழைத்து வருகிறார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலீஸார் அவரை என்கவுன்ட்டர் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் அவரைப் பற்றி அவதூறாக பத்திரிகைகளில் செய்தி பரப்புகின்றனர். அவர் பிடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டால் பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக இப்படியெல்லாம் செய்கின்றனர். என் கணவர் எந்தவித தீவிரவாதச் செயலிலும் ஈடுபடவில்லை. அரசுதான் கருணையோடு அவரது உயிரைப் பாதுகாக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.தவ்ஃபீக்கின் வக்கீல்களிடம் பேசிய போலீஸாரும், `ஜமாத் ஆட்களின் உதவியோடு அவரைக் கூட்டி வாருங்கள். என்கவுன்ட்டர் பயம் தேவை யில்லை' என்று கூறியுள்ளனர். நாமும் தவ்ஃபீக்கைச் சந்திக்க அவரது வக்கீல்கள் மூலம் தொடர்ந்து முயற்சி செய்தோம். நமது தேடுதலை அறிந்து கொண்ட தவ்ஃபீக் நமது செல்போன் எண்ணுக்கே லைனில் வந்தார்."வணக்கம். என் பேர் தவ்ஃபீக். இந்தப் பேரைச் சொல்வது என்பது புரியாத அரபு பாஷையைச் சொல்வதுபோல்தான். அதனால் `இறையுதவி' என பெயரை மாற்றிக் கொண்டேன். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட் டினம்தான் எனக்குச் சொந்த ஊர். மர்லியா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். சிறு வயது முதலே இஸ்லாத்தில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறேன். மற்ற இஸ்லாமிய அமைப்பு களைக் காட்டிலும் தமிழ் மரபு சார்ந்த விஷயங்களைப் பற்றி நான் பேசும் முறைகள் மார்க்க பெரியவர்கள் பலருக்குப் பிடிக்காமல் போய்விட்டது. என் வாழ்நாளில் சிறுபான்மையினர் நலனுக்காகப் பாடுபட்டு வருகிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு நான்காயிரம் ஓட்டுக்களை வாங்கினேன்.ஆரம்பகாலத்தில் அதிராம்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தேன். அப்போது ஊருக்குள் கள்ளச்சாராயம் பெருகியிருந்தது. போலீஸார் கண்டுகொள்ளாததால் எனக்கும், போலீஸாருக்கும் இடையில் பலமுறை சண்டை வரும். அவர்களும் என்னைப் பழிதீர்க்க நேரம் பார்த்திருந்தார்கள். அப்போது (2000-ம் ஆண்டு) அதிராம்பட்டினத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார். அதில் நான்தான் முக்கியக் குற்றவாளி எனக் கைது செய்தார்கள். கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். ஜாமீனில் வெளிவந்ததும் சென்னை மண்ணடிக்குக் குடிபெயர்ந்தேன்.சமயம் சார்ந்து உள்ள மரபுகள் பற்றியும், தமிழ் மரபை இன்னொரு மரபு ஆயிரம் ஆண்டுகாலமாக எப்படியெல்லாம் அடிமைப்பட வைத்திருக்கிறது என்பது பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் மேடைகளில் பேசி வருவது தான் எனக்கு முக்கிய வேலை. கடந்த 2002-ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்பது டெட்டனேட் டர்களை போலீஸார் கண்டெடுத்தனர். இதை நான்தான் மறைத்து வைத்திருந்ததாக என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போதுதான், அந்தக் கொடுமை நடந்தது. மும்பை காட்கோபர் பகுதியில் பஸ் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து இரண்டு பேர் பலியானார்கள். அதில் நான்தான் கைப்பைக்குள் குண்டு வைத்து, வெடிக்க வைத்ததாக மும்பை போலீஸார் விசாரணைக்காக என்னைக் கொண்டு சென்றனர். சொல்லப்போனால் போலீஸார் என்னை 26.11.02-ம் தேதியன்று கைது செய்தனர். 29-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதியும் போலீஸ் கஸ்டடிக்கு என்னை அனுப்பி வைத்தார். இதைப் பற்றி பத்திரிகைகளிலும், உங்கள் குமுதம் ரிப்போர்ட்டரிலும் என்னைப் பற்றி செய்தி வெளியானது.மும்பையில் குண்டு வெடித்தது டிசம்பர் 2-ம் தேதி. போலீஸாரின் கஸ்டடியில் இருந்த நான், எப்படி மும்பை போய் குண்டு வைக்க முடியும்?. நான் முஸ்லிம் என்பதற்காகவே தீவிரவாதியாக சித்திரிக் கப்பட்டேன். மராட்டிய போலீஸார் என்னை சித்திரவதை செய்தனர். என்னைப் போலவே இருபத்தைந்து அப்பாவிகள் சிறையில் இருந்தனர். மும்பை வழக்கில் என் மீது பொடா சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டனர். மும்பை தானே மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். தமிழக போலீஸாரின் கஸ்டடியில் இருந்ததை ஆதாரத்துடன் நிரூபித்ததால் `நான் குற்றவாளி அல்ல' என விடுதலையாகிவிட்டேன். அதிராம்பட்டினம் டிரைவர் கொலையில் இருந்தும் விடுதலையாகிவிட்டேன். டெட்டனேட்டர் பதுக்கியிருந்ததாக போலீஸார் தொடுத்த வழக்கில் சிறையில் நீண்ட காலம் இருந்ததால், நீதிபதி பெயில் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இதன்பிறகு தமிழ்நாடு உளவுத்துறையும், மத்திய உளவு அமைப்புகளான ஐ.பி.யும் என்னைச் சுற்றியே வருவார்கள். நானும் அவர்களிடம் சகோதர பாசத்துடன்தான் பழகி வந்தேன். கடலூர் மத்திய சிறையில் இருக்கும் போதே, பழ.நெடுமாறன் உள்பட பல முக்கியமான மனிதர்கள், மனித உரிமை ஆர்வலர்களிடம் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இதைப் பார்த்த உளவுப் பிரிவு போலீஸார், `அவர்களோடு உங்களுக்கு என்ன தொடர்பு? தடை செய்யப்பட்ட அமைப்புகளைப் பற்றி எங்களுக்குத் தகவல் சொல்லுங்கள்?' என்று நிர்ப்பந்தித்தனர். நானோ, `என்னால் மாமா வேலை பார்க்க முடியாது' என முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டேன். இதில் என் மீது போலீஸாருக்கு ஏக கோபம்.தமிழ் மரபு சார்ந்து கூட்டங்களில் பேசும்போதெல்லாம், உளவுப் பிரிவு போலீஸார், `நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். மற்ற சமயத்தவர்கள் பற்றிப் பேசுவது மிகவும் ஆபத்தானது' என்றெல்லாம் சொல்வார்கள். நான் ஒருமுறை சவூதிக்குப் போய் வந்தேன். அங்கு வெளிநாட்டு பிரஜை என்பதற்கான அடையாள அட்டை யை நான் ரினீவல் (புதுப்பிப்பு) செய்யவில்லை. உடனே என்னை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
நான் சவூதிக்குப் போய் வந்ததைத் தெரிந்து கொண்ட ஐ.பி. போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். `நீ அல்கொய்தா, லஸ்கர் - இ - தொய்பா அமைப்புகளின் தொடர்புகளை மேம்படுத்திக் கொள். அவர்களின் செயல் பாடுகளை எங்களுக்குச் சொன்னால் வேண்டிய பணம் தருவோம். உன் குடும்பத்திற்கும் உதவி செய்வோம். உன்னால் எளிதாக தொடர்புகளை ஏற்படுத்த முடியும்' என்றனர். நான்,`அப்படித் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் போலீஸ்,தீவிரவாதிகள் என ரெண்டு பக்கமும் எனக்கு ஆபத்து உள்ளது. என்னால் முடியாது' என்று சொல்லிவிட்டேன்.
இதன்பிறகு நான் `லஸ்கர் - இ - தொய்பா' தீவிரவாதி என்பதைப் போலவே போலீஸார் பிரசாரம் செய்தார்கள். நரேந்திர மோடி சென்னை வந்தபோது `முன்னெச்சரிக்கை நடவடிக்கை' என்று சொல்லி என்னைக் கைது செய்து, பதினெட்டு நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இந்த நேரத்தில் தான் என்னைச் சுற்றி போலீஸார் வளையம் போட ஆரம்பித்துள்ளனர். கடந்த ஞாயிறன்று (4-ம் தேதி) மண்ணடி அங்கப்பநாயக்கர் தெருவில் பள்ளிவாசல் தொழுகை முடித்துவிட்டு ஓட்டலில் நண்பர்களோடு டீ குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எஸ்.ஐ.யூ (ஸ்பெஷல் இன் வெஸ்டிகேஷன் யூனிட்) போலீஸ் எஸ்.ஐ. அசோக் என்னை மறைந்திருந்து நோட்டம் விட்டார். எனது நண்பர்களும், `அவர் நீண்ட நேரமாகவே உங்களை வாட்ச் செய்கிறார்' என்றனர். நான் அசோக்கின் செல்போன் எண்ணை வாங்கி அவரைத் தொடர்பு கொண்டேன். அவர் போனை எடுக்கவில்லை. உடனே, உளவுப் பிரிவு போலீஸாருக்குப் போன் செய்து விசாரித்தேன். அவர்களும் மழுப்பிவிட்டனர். அந்தப் பகுதியில் மஃப்டியில் பல போலீஸார் நின்று கொண்டிருந்தனர். ஏதோ நடக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து தப்பி, நண்பர் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருந்தேன்.இரண்டு நாட்கள் கழித்து எனது வக்கீல் சந்திரசேகரின் பெசண்ட் நகர் வீட்டுக்கு இரவு ஏழு மணிக்குப் போனேன். அவர் வீட்டில் நான் போய்ச் சேர்ந்த பத்து நிமிடத்தில் அவருக்கு ஒரு போலீஸ் நண்பர் போன் செய்திருக்கிறார். வழக்குரைஞரின் முகமே வியர்த்துவிட்டது. என்னிடம் திரும்பியவர், `ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷல் டீம் எனது வீட்டை நோட்டம் விடுவதாகச் சொல்கிறார். யாரைச் சொல்கிறார்?' என்று கேட்டார். நான் இரண்டு நாளைக்கு முன்பு நடந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரும் தனது ஜூனியர்களை வெளியில் அனுப்பி பார்த்து வரச் சொன்னார். ஒரு ஆம்னி வேன், பைக் ஆகியவற்றில் மஃப்டி போலீஸார் இருந்தனர். அந்த நேரத்தில் தெருவில் லைட் ஆஃப் ஆனது. வக்கீல் வீட்டில் மட்டும் லைட் எரிந்தது. உடனே எனது இயக்கத்தவர்களுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் ஒரு முப்பது பேர், ஜூனியர் வக்கீல்கள் எனத் திரண்டு வந்து என்னைத் தப்ப வைத்தனர்.கடந்த 11-ம் தேதி எனது நண்பர் ரிட்டயர்டு எஸ்.பி ஜேம்ஸ்ராஜ் வசிக்கும் சூளைமேடு வீட்டிற்குப் போன கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சுதர்சன், என்னைத் தேடி வந்திருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், தன்னை சூளைமேடு ஸ்டேஷன் ஏட்டு என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். விசாரிக்கும்போதுதான் உண்மை நிலவரம் தெரிந்துள்ளது.`இறைவனால் உருவாக்கப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றிப் பறிக்காதீர்கள்' என்று குரான் சொல்கிறது. ஆனால், என் உயிரைப் பறிக்க போலீஸார் அலைந்து கொண்டிருக்கின்றனர். எனக்கும், இஸ்லாத்தின் மார்க்க அறிஞர்களுக்கும் இடைவெளி இருக்கிறது. அதனால் தவ்ஹீத் துகள், த.மு.மு.க என யாருமே எனக்காகக் குரல் கொடுக்க வர மாட்டார்கள். அதுதான் போலீஸாருக்கு கூடுதல் தைரியத்தைக் கொடுத் திருக்கிறது. இறைவன் கருணையால்தான் நான் உயிர் தப்பியிருக்கிறேன். என் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளும் புனையப்பட்டவைதான். எதிலும் எனக்குச் சம்பந்தம் கிடையாது. நாங்கள் இறைப்பணியையும், மக்கள் பணியையும் மட்டும்தான் செய்து வருகிறோம். இதற்காக எங்கு குண்டு வெடித்தாலும் தவ்ஃபீக்தான் காரணம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?.
நான் அல்கொய்தாவும் இல்லை. லஸ்கர் - இ - தொய்பாவும் இல்லை. என்னைப் படுகொலை செய்ய போலீஸார் செய்யும் சூழ்ச்சியை மாநிலம் முழுவதும் கூட்டம் போட்டு எங்கள் அமைப்பினர் அம்பலப்படுத்துவார்கள். அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறோம்'' என்றதோடு முடித்துக் கொண்டார் தவ்ஃபீக். ஆனால், கியூ பிரிவு போலீஸாரோ, " என்னைக் கொல்ல முயற்சிக் கிறார்கள் என்று தவ்ஃபீக் சொல்வது வீண் விளம்பரம்தான். அப்படியொரு எண்ணமே போலீஸாருக்குக் கிடையாது. கேரளாவில் உள்ள வழக்குகளில் அவர் மீது பிடிவாரண்ட் போடப்பட்டிருக்கிறது. அதற்காகத்தான் ரிட்டயர்டு எஸ்.பி வீட்டில் தவ்ஃபீக்கைத் தேடி போலீஸார் சென்றுள்ளனர். காரணம், அவர் வீட்டில்தான் வாடகைக்கு அலுவலகம் எடுத்துச் செயல்பட்டு வந்தார் தவ்ஃபீக். `இறைவன் ஒருவனே' அமைப்பினர் இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் உள்பட மூன்று பேரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்திருந்தனர். அவர் தவறே செய்யவில்லையென்றால் எதற்காக ஓடி ஒளிய வேண்டும்? போலீஸார் மீது அவதூறு பிரசாரத்தைக் கிளப்பு வதுதான் அவரது வாடிக்கை'' என்கின்றனர்.
நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

நாகை மாவட்டம் தோப்புத்துறை யில் அவசர கால ஊர்தி சேவை





நாகை மாவட்டம் தோப்புத்துறை யில் அவசர கால ஊர்தி சேவை





நாகை மாவட்டம் தோப்புத்துறையில் ஜமாஅத் மன்றம் சார்பாக அவசரகால ஊர்தி ( ஆம்புலன்ஸ் ) வழங்க பட்டது,தோப்புத்துறை மக்களின் நீண்ட கால தேவைகளில் ஒன்றான ஆம்புலன்ஸ் வசதிக்காக ஜமாஅத்-தார்கள் முயற்சிகள் மேற்கொள்ள பட்டது, தோப்புத்துறை தொழிலதிபர் ஜனாப். ஆரிபா அவர்களின் நன்கொடையில் அதற்கான வாகனம் வாங்கப்பட்டது,இதன் மூலம் தோப்புத்துறை மற்றும் சுற்று வட்டார மக்கள் பயன் அடைவார்கள்,ஜமாஅத் மன்றம் மற்றும் உதவும் கரங்கள் என்ற அமைப்பு சார்பாக ஆரிபா குடும்பத்தார்க்கு நன்றி தெரிவித்து பிரசுரம் வெளியிட பட்டது.








தகவல் - ஏ.நஜிப் - செய்திகள் தொகுத்தவர் - ஆதம்.ஆரிபின்

தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்ப

தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்பு


துபாயில் ஜாக் தலைமை நிலைய நிர்வாகிகளுடன் தோப்புத்துறை மர்கஸ் நிர்வாகிகள் சந்திப்பு - புகைப்படங்கள்









ஜாக் தலைவர் எஸ்.கே.கமாலுதீன் மதனி'யுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள் ஹஜாதீன் , அப்துல் அஜீஸ் ,ஜெகபர் அலி மற்றும் உறுப்பினர்கள் .



கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் அமீர் அப்துல் அஜீஸ் பேசியபோது...




அரபு அமீரக ஜாக் அமீர் ஷைகு . இக்பால் மதனியுடன் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்




கூட்டத்தில் தோப்புத்துறை மர்கஸ் நிருவாகிகள்


News from

http://samuthayam.blogspot.com

மறைக்கப்பட்ட உண்மைகள்

வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள் (கோவை சிறைவாசிகள் பற்றியது)(VIDEO)



வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின்
மறைக்கப்பட்ட உண்மைகள்




கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கு இலவச ஆலோசனைகள்

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம் சமுதாயம் எதிர்காலத்தில் எல்லா வகையிலும் உயர்வு பெற்ற சமுதாயமாகத் திகழ, பரந்த நோக்குடன் பல்வேறு திட்டங்களுக்கு நல்வழிகாட்டுகிறது தஞ்சை வல்லத்தில் கடந்த மே 10, 11 ஆகிய தேதிகளில் நடை பெற்ற தவ்ஹீத் எழுச்சி மாநாடு.
மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும் பல்வேறு வழிகாட்டுதல்கள் தொடர்பாக கூடுதல் விபரங்கள் அறிய கீழ்க்காணும் சுட்டிகளைச் சொடுக்குங்கள். உங்களைச் சார்ந்தோர் அனைவருக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
1.முஸ்லிம்களின் கல்வி பொருளாதார நிலை ஓர் ஆய்வு
2.பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ
3.மாதச் சம்பளம் 2 இலட்சத்திற்கு மேல் வேண்டுமா?
4.நீங்களும் பட்டம் படிக்கலாம்
5. வீட்டில் இருந்தே படிக்க
6. கல்வி உதவி
7. மாதம் பல இலட்ச ரூபாய் இந்தியாவிலேயே சம்பாதிப்பது எப்படி?
8. எளிதில் வேலை கிடைக்க
9. கேம்பஸ் இன்டர்வியூ செல்லும் முன் கவனிக்க வேண்டியவை
10. HR Interview (நேர்முகத் தேர்வு)

பள்ளிகளில் படமெடுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாம்பு ! நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதை.
மதவாத நஞ்சை மாண வர்கள் மத்தியில் விதைக்கும் கேடு கெட்ட செயல்தானே? "அரசு விழிக்கட்டும்! ஆரிய விரியன்களை அடக்கட்டும்"

செங்கற்பட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் மேனிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்காக செங்கற்பட்டு நகராட்சியின் எதிர்ப்பையும் புறந்தள்ளி 1967-இல் தமிழ்நாடு அரசே 5 ஏக்கர் நிலத்தினை இலவசமாக அளித்துள்ளது. (G.O. M.S. No.1461 Revenue Dept dated 24.8.1967).

ஒரு கல்வி நிறுவனம் என்கிற காரணத்தால் அரசு நிலத்தை இனாமாக வழங்கியுள்ளது.ஆனால் ராமகிருஷ்ணர் பெயரில் பள்ளி நடத்தும் அந்த நிருவாகம். அப்பள்ளியை ஆர்.எஸ்.எஸின் பாசறையாக, பயிற்சிக்கூடமாக மாற்றி இருக்கிறது என்பதுதான் பயங்கரம்.

இருபது நாள்கள் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. வீர வாத்ய அணி வகுப்புடன் (17.5.2008) சீருடை அணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணி வகுப்பும் நடத்தப்படுகின்றது.

இதற்கான துண்டு அறிக்கைகளும் ஆயிரக்கணக்கில் பொது மக்களிடம் விநியோகிக்கவும் பட்டுள்ளன.ஆர்.எஸ்.எஸ் என்பது நான்கு முறை மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.

காந்தியாரைப் படுகொலை செய்த பாசிசக் கூட்டமாகும். இந்தியாவில் நடைபெற்றுள்ள பல்வேறு மதக்கலவரங்களுக்கும் சூத்ரதாரியாக இருந்திருக்கிறது என்பதை அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணையங்கள் அதிகாரப் பூர்வ அறிக்கைகள் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

1925-இல் ஆர்.எஸ்.எஸ். தோற்றுவிக்கப் பட்டது என்றால் 1927-ஆம் ஆண்டிலேயே நாக்பூரில் வகுப்புக் கலவரத்தை நடத்தத் தொடங்கி விட்டனர்.

கபூர் கமிஷன், டி.பி. மதன் கமிஷன், ரகுபார் தயாள் கமிஷன், ஜெகன்மோகன் கமிஷன், நீதிபதி ஜிதேந்திர, நாராயண் கமிஷன், நீதிபதி பி. வேணுகோபால் கமிஷன் என்று கமிஷன்களின் நீண்ட பட்டியல் உண்டு.இத்தனை ஆணையங்களும் (Commission) ஒன்றுபோல பல்வேறு இடங்களிலும் தூண்டி விடப்பட்ட கலவரங்களுக்குக் காரணகர்த்தாவாக ஆர்.எஸ்.எஸ். இருந்திருக்கிறது என்று திட்டவட்டமாக அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளன.

இந்த ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பலுக்கு வெளிநாட்டிலிருந்து ஏராளமான பணம் வந்து குவித்து கொண் டிருக்கிறது.தன்னார்வத் தொண்டு என்ற பெயரில் இந்தியாவைச் சேர்ந்த 30 ஆயிரம் அமைப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன.

இங்கிலாந்தில் பாசிச அமைப்பான இந்த ஆர்.எஸ்.எஸ்., தன்னை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டுள்ளது. குஜராத் பூகம்பத்தை ஒட்டி இந்தச் சங்பரிவார்; கும்பல் திரட்டிய தொகை பல கோடியாகும்.

பூகம்ப நிவாரணத் துக்காகத் திரட்டப்பட்ட பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய் சேர்ந்திடவில்லை. மதவெறி வளர்வதற்குத்தான் பயன்படுத்தப்பட்டது.

தென் கிழக்கு ஆசியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க ஒரு குழு இருக்கிறது. அதன் பெயர் அசாவ் (Asaw) என்பதாகும்.

அந்தக் குழுவினர் இந்தியா வந்து இங்கிலாந்தில் திரட்டப் பட்ட நிதி எந்த வகையில் செலவு செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தது.British Charity Hindu Extremism என்ற தலைப்பில் அந்தக் குழுவினர் 80 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அளித்தனர். ஆர்.எஸ்.எசும் மற்றும் சங்பரிவர்களும் தொண்டு நிறுவனங்கள் அல்ல இந்துத் தீவிரவாத அமைப்புகள், எனவே அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் என்ற பட்டியலிலிருந்து இவை நீக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்திலேயே முழக்கம் கேட்டதுண்டு.

குஜராத் பூகம்பத்துக்கு அளிக்கப்பட்ட நிதி மட்டுமல்ல; 2002-இல் குஜராத்தில் அரசு பயங்கரவாதத்தினால் 2000 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அல்லவா?

ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்த தவிர்த்தனரே - இரண்டு லட்சம் பேர் அகதி முகாம்களில் சரணடைந்தனரே அதற்காக அளிக்கப்பட்ட நிதியையும் ஆர்.எஸ்.எஸ். தவறாகவே பயன்படுத்தியது.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாயிற்று.

வசூலிக்கப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆர்.எஸ்.எஸ்., பள்ளிகளுக்குச் சென்றது.

இந்தப் பின்னணியைத் தெரிந்து கொண்டால் செங் கற்பட்டில் இராமகிருஷ்ண மடம் நடத்தும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். முகாம் ஏன் நடக்கிறது என்பதற்கான காரணம் எளிதாகப் புரிந்துவிடும்.

கல்வி நிறுவனங்கள் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி கூடாது என அரசே சுற்றறிக்கை விட்டதுண்டு.

அதனைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து செங்கற்பட்டில் இராம கிருஷ்ணா பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆர்.எஸ்.எஸ். முகாமாக இயங்குகிறதே - எப்படி?

சிறுபான்மையினர் மீது வெறுப்பைக் கற்றுக் கொடுத்து பிள்ளைகளை வன்முறை வெறியர்களாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்களா?

5 ஏக்கர் நிலத்தை அரசு கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். முகாம் அமைக்கத்தானா?

மானமிகு மாண்புமிகு கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு இத்தகு பள்ளிகளில் நடவடிக்கைகளைக் கண்காணித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்விக் கூடங்கள் காவி மயமாகிவிடும்.

ராமகிருஷ்ணா விவே கானந்தர், வித்யசாலா பெயர் களில் இயங்கும் பள்ளிகள் கண்காணிக்கப்பட வேண்டும். வன்முறை விளைச்சல் கழனியாக உருவெடுத்துவிடும்.

பிள்ளைகளைப் படிக்க அனுப்புகிறோமா - வன் முறையாளர்களாக ஆவதற்கும் பயிற்சி பெற அனுப்பு கிறோமா?

செங்கற்பட்டு ராம கிருஷ்ண பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு அளிக்கப்பட்ட அய்ந்து ஏக்கர் நிலத்தையும் திரும்பப் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் அரசுக்குச் சொந்தமான பூங்காக்கள் போன்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்கிற சுற்றறிக்கை மீண்டும் ஒரு முறை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு பள்ளி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பேரணி குறித்து பச்சையாகத் துண்டு அறிக்கை அச்சிட்டுப் பொது மக்களுக்கும் வழங்கும்?

காவல்துறை இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்குப் பள்ளி நிருவாகம் கொடுத்திருக்கும் தலைப்பு - பண்புப்பயிற்சி முகாமாம்.என்ன அந்தப் பண்பு? இந்துத்துவாதானே?

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தியாவில் வாழவே கூடாது என்கிற வக்கிரப்புத்திதானே!

மதவாத நஞ்சை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் கேடு கெட்ட செயல்தானே?

வடபுலத்திலே ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளில் புகட்டப்படும் நஞ்சு தமிழ்நாட்டிலும் கடை விரிக்கிறது என்பது வெளிப் படையாகவே தெரிகிறது.

"அரசு விழிக்கட்டும்! ஆரிய விரியன்களை அடக்கட்டும்"

(தகவல் உதவி: திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு கோவிந்தசாமி அவர்கள்- -) மின்சாரம். viduthalai.com

"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" - JAQH

ஜாக்' என்று தமிழ் பேசும் மக்களிடம் சுருக்கமாக அறிமுகமாகி இருக்கும்

"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" என்ற அமைப்புதுவங்கப்பட்டு இருபது ஆண்டுகளாக இஸ்லாமிய மார்க்கத்தைஅதன் தூய வடிவில் ஜாதி பேதமின்றி அனைத்து மக்களுக்கும்அறிமுகபடுத்திக் கொண்டும் , அழைப்பு பணியிலும் கல்விபணியிலும் மற்றும் சமுக பணியிலும் அயராது பாடுபட்டுவருகிறது.


கடந்த ஒரு மாத காலமாக அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தனதுஅமைப்பின் கிளையை முறைப்படி ஆரம்பித்துள்ளது, அல் ஹம்துலில்லா... இதன்தொடர்ச்சியாக கடந்த 16-05-2008 வெள்ளிகிழமை அன்று துபாயில் தாயக அமீர் எஸ்கே .கமாலுதீன் மதனி அவர்கள் தலைமையில் அமீரக செயற்குழு கூட்டம்நடைபெற்றது, கூட்டத்தில் ஒட்டு மொத்த அமீரக நிர்வாகம் தேர்ந்தெடுக்க பட்டது,
.
தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரம்

இன்சா அல்லாஹ்... அல் ஜன்னத் மாத இதழில் விரைவில் வெளிவரும்...

---------------------------------------------------------------------------------------------------------------

"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்"

குர்ஆன் சுன்னாவை அடிப்படையாகக் கொண்ட தமிழகத்தின் முதன்மையான தவ்ஹீத் அமைப்பு

இந்த அமைப்பு - குழம்பிய குட்டை அல்ல...
சமுத்திரம்... மாபெரும் சமுத்திரம்...

ஆர்ப்பரிக்கும் அலைகள் இல்லாத அமைதியான சமுத்திரம்...

ஆள் பலம் காட்டி அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம் அல்ல..
இஸ்லாமிய பணி செய்து இறைவனின் அன்பை பெறுவதே நோக்கம்...
காகித பூக்கள் மீது வாசனை தெளித்து, வார்த்தை ஜாலங்களால்...இஸ்லாத்தின்பெயர்கூறி வியாபாரம் செய்வதல்ல நோக்கம்...

இஸ்லாமிய கோட்பாடுகளை, அதன் தூய வடிவில் இவ்வுலகிற்கு உணர்த்துவதேநோக்கம்...

தமிழகம் முழுவதும் எழுபதுக்கும் மேற்ப்பட்ட மர்கஸ்கள்,
கல்விநிறுவனங்கள்,அனாதை இல்லம் என்று நிருவாகிக்கும் தனித்தன்மை...

இவைகள் அனைத்தும் பெரும் புகழ் பெறுவதற்க்கில்லை...

இவைகளை காட்டி லாபம் அடைய பணம் வசூலிப்பதற்காக நடத்தபடுபவை இல்லை...
புனிதமான நோக்கம், அது இறைவனின் அன்பை பெறுவதே...


சகோதரர்களே...
ஜாக் அமைப்பில் இணையுங்கள்...தன்னலமற்ற ஒரு சேவைக்கு தயார் ஆகுங்கள்...

அன்புடன்
தோப்புத்துறை - ஹாஜதீன்

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்.....)

நேற்று 16-05-2008 வெள்ளிக்கிழமை அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு துபாய் நைப் பார்க் அருகில் மலபார் சூப்பர்மார்க்கெட் எதிரில் மினி பவனில்
"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
அமீரக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டததில் தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வருகை தந்திருக்கும் "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" அமைப்பின் அமீர் கமாலுதீன் மதனி மற்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்நிகழச்சியில் அமீரக "ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" அமைப்பின் அமீரக நிர்வாகிகள் தோந்தெடுக்கப்பட்டார்கள்.



Fore More News...

செய்திகள் : JAQH அமீரகம்

வேலை வழிகாட்டி

அஸ்ஸலாமு அலைக்கும்.

இங்கே சொடுக்குங்கள் குறிப்பிட்ட தகவல்களைப் பெற:

* வேலை வழிகாட்டி

* கல்வி உதவித் தொகை பற்றிய இணையம்
* உடல் ஊனமுற்றோருக்கான கடன் வாய்ப்புகள்!
* பிரிட்டன் குடியேற்றத்திற்கு
* வேலை வா‌ய்‌ப்பு‌ப் ப‌யி‌ற்‌சி
* பொறியியல் மாணவர் வேலை..
* மதுரை காமராஜர் ப‌ல்கலை தேர்வு முடிவுகள்!
* அ‌றிவுசா‌ர் அய‌ல்ப‌ணி‌த் துறை‌யி‌ல்
* வேலைவா‌ய்‌ப்பை உருவா‌க்கு‌ம்
* சட்டத்துறை அயல் அலுவலக பணி
* மாணவர் குறைதீர்ப்பு பிரிவு
* ஓட்டுனர் பயிற்சி பள்ளி திறப்பு
*
பட்டு நூல் விவசாயிக்கு கடனுதவி
*
இன்டர்வியூ கேள்வியு‌ம் பதிலு‌ம்
*
டிப்ளமோ' முடித்தவர்கள் நர்சிங்..
*
சென்னை பல்கலையில் கூடுதலாக
*
ஆடை வடிவமைப்பு: அனுமதி!
*
திறன் மேம்பாட்டு பயிற்சி


அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.
Webmaster of Darulsafa.

http://www.darulsafa.com

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாட

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடுதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எதிர்வரும் மே 18,2008 ஞாயிறன்றுஇஸ்லாமிய இலக்கிய கழகம் மாநில மாநாட்டை நடத்த இருப்பதாக அதன்பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இஸ்லாமிய இலக்கியக் கழகம் இதுவரை ஏழு அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கியமாநாடுகளை நடத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்த வேண்டும்என்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தீர்மானத்தின்படி, முதல் மாநில மாநாடுமே 18, 2008 அன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நிகழ இருக்கிறது.சிறப்பு நிகழ்வுகள்கருத்தரங்கம் : கருத்தரங்கக் கருதமிழக இலக்கிய, சமூக, கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியில்முஸ்லிம்களின் பங்கு என்பது இம்மாநாட்டுக் கருத்தரங்கப் பொருளாக ( Themeof the Conference ) இருக்கும்.1. இதுவரை ஆய்வு செய்யப்படாத இஸ்லாமிய இலக்கியங்கள்2. தமிழகக் கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பாடுபட்டமுஸ்லிம் சான்றோர்கள்3. கல்வி வளர்ச்சியில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு4. மார்க்கக் கல்வி வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்களிப்பு5. தமிழகப் பண்பாட்டு ( உணவு, உடை,அணி,இசை, கட்டிடக் கலை, கைவினைப்பொருள், நாடகம், பிறப்பு, திருமணச் சிறப்புச் சடங்குகள், ஈத், கந்தூரி,விளையாட்டு, குடிப்பெயர், தொழில், வணிகம், மொழி) வளர்ச்சியில்முஸ்லிம்களின் பங்கு6. முஸ்லிம்களின் மத நல்லிணக்கப் பணிகள்7. நாட்டுப்புறவியல்8. மார்க்க இலக்கியம்9. நவீன இஸ்லாமிய இலக்கியம்பேராளர் :தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களும், புரவலர்களும் மட்டுமேபேராளர்களாகக் கலந்து கொள்ள முடியும். பேராளர்களுக்கும்,வெளியூர்க்காரர்களுக்கும் உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்துதரப்படும்.பேராளர்களுக்கெனத் தனிக் கட்டணம் இல்லைகட்டுரைகள் ஏ4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல், கணினி அச்சு செய்துஅனுப்ப வேண்டும்.கட்டுரைகளைத் திருத்த ஆய்வரங்கக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

மாநாட்டுச் சிறப்பு மலர் :

சிறப்பு மலருக்குப் பொருத்தமான வகையில் ஏ4 அளவில் 6 பக்கங்களுக்கு
மிகாமல் ஒளியச்சு செய்த கட்டுரைகள், 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகள்
வரவேற்கப்படுகின்றன.

விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரக் கட்டணப்பட்டியல்

மலர் அளவு : 22 செ மீ x 28 செ மீ

ஒரு பக்க வண்ண விளம்பரம் ரூ 8000
ஒரு பக்க கறுப்பு வெள்ளை விளம்பரம் ரூ 5,000
அரைப் பக்க விளம்பரம் ரூ. 3,000

மாநாட்டு மலருக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பரக் குழு

அல்ஹாஜ் நூர் முஹம்மது, ஒலிம்பிக் கார்ட், சென்னை
அல்ஹாஜ் அஹ்மது ரிபாயி
அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லா
அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷாஜஹான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
ஹாஜியானி பாத்திமா முஸாஃபர்
அல்ஹாஜ் பி. அப்துல் காதர், எம்.எம்.எஃப் லெதர்ஸ்

வரைவோலை / காசோலை : ISLAMIA ILAKKIYA KHAZHAGAM
என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க அளவில் அனுப்பப்பட வேண்டும்
( விளம்பரச் செய்தியைத் தனியாகத் தட்டச்சு செய்து தர வேண்டுகிறோம் )





செயல்திட்டங்கள்

1 திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 'இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப்
பண்பாட்டு இருக்கை'யினை நிறுவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

2. இயங்காமல் இருந்த தஞ்சைப் பல்கலைக்க கழக 'இஸ்லாமிய ஆய்வு இருக்கை'யை
பிரசிடெண்ட் ஓட்டல் தலைவர் ஜனாப் அபுபக்கர் வாயிலாகப் ( துணைத்தலைவர்,
இஸ்லாமிய இலக்கியக் கழகம்) புதிதாக நிதி உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு
விட்டது.

3. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக வேண்டுகோளின்படி,
பினாங்கு டத்தோ ஜனாப் பரக்கத் அலி அவர்கள் நிறுவிய மர்ஹூம் ஹாஜி 'மாயின்
அபூபக்கர்' பெயரில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டுச்
சொற்பொழிவிற்கான அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.

4. முனைவர் பேராசிரியர் ஜனாப் நெயினார் முஹம்மது பெயரில் ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச்
சொற்பொழிவு நிறுவப்பட உள்ளது.

5. அறங்கக்குடி வள்ளல் ஒய்.எம்.எச். ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் பெயரில்
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவ ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

6. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, சேலம் ஈ.வெ.ரா.,
கோவை பாரதியார், அண்ணாமலை, அன்னை தெரசா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்,
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய எஞ்சியுள்ள பல்கலைக்கழகங்களில்
இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிறுவ
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. வருகிற மே 18 ஆம் தேதி 2008 இல் இவ்விழாவில் சதாவதானி சேகுத்தம்பிப்
பாவலரின் நினைவு அஞ்சல் தலையினை மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமிகு.
ராசா அவர்கள் ( தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ) வெளியிடுகிறார்.

8. இவ்வாண்டும் 'அல்ஹாஜ் மர்ஹூம் பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா
அறக்கட்டளை' சார்பாக உமறுப்புலவர் விருதும், ரூபாய் ஒரு இலட்சமும்
வழங்கப்படுகிறது.

9. கல்வித்தந்தை சமூக வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் அவர்களுக்கும்,
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை நிறுவிய பெரும்புலவர் சி.நயினார் முஹம்மது
அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

10. பொற்கிழியுடன் கூடிய சிறப்பு விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

நூல் வெளியீடு

மாநாட்டில் புதிய நூல்கள் வெளியிடப்படும். நூல்களை வெளியிட விரும்புவோர்
இப்போதே பதிவு செய்ய வேண்டுகிறோம். நூல்கள் 2007,2008 ஆம் ஆண்டுகளில்
வெளிவந்ததாக இருக்க வேண்டும். 80 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க
வேண்டும். 100 படிகள் பேராளர்களுக்கு வழங்க 2008 ஏப்ரல் இறுதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டும்.

நூல் அன்பளிப்பு

பேராளர்களுக்குத் தங்கள் நூல்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புவோர் 300
படிகளுக்குக் குறையாமல் மாநாட்டு அலுவலகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

அரிய நூல் பதிப்பு

இதுவரை அச்சு வடிவம் பெறாத அரிய இஸ்லாமிய இலக்கியங்கள் இம்மாநாட்டில்
வெளியிடப்படவிருக்கின்றன.

இஸ்லாமிய இலக்கியக் கழகம்

சிறப்பு நெறியாளர்கள்

பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முஹம்மது
நீதியரசர் சி.மு. அப்துல் வகாப்
டாக்டர் சே.சாதிக்


நெறியாளர் : கவிக்கோ அப்துல் ரகுமான்
தலைவர் : கேப்டன் என்.ஏ. அமீர் அலி
துணைத்தலைவர் : பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர்
பொதுச்செயலாளர் : எஸ்.எம். ஹிதாயத்துல்லா - 044 2846 0128 / 98 400 40067
பொருளாளர் : எஸ்.எஸ். ஷாஜஹான்

அமீரக ஒருங்கிணைப்பாளர்

முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் 050 452 4990
முதுவை ஹிதாயத் 050 51 96 433


விளம்பரம் அனுப்ப வேண்டிய முகவரி :

எஸ்.எம். ஹிதாயத்துல்லா
பொதுச்செயலாளர்
இஸ்லாமிய இலக்கிய கழகம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணா சாலை
சென்னை 600 002
தொலைபேசி : 044 2846 0128 / 98 400 40067




மாநாட்டுப் புரவலர்கள்

1. அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன்
மேலாண் இயக்குநர், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்கள்
2. அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்
தலைவர், சதக் அறக்கட்டளை
3. அல்ஹாஜ் டி.இ.எஸ். பத்ஹுர் ரப்பானி
தாளாளர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
4. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துல் காதர் புஹாரி ( சீதக்காதி அறக்கட்டளை )
5. அல்ஹாஜ் முஹம்மது இல்யாஸ், பேங்காங்
6. அல்ஹாஜ் சேகு நூர்தீன், ஏ.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை
7. அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தபா, ரஹ்மத் அறக்கட்டளை
8. அல்ஹாஜ் ஒய்.எம். ஹபீபுர் ரஹ்மான், அரங்கக்குடி
9. அல்ஹாஜ் எஸ். அஹமது மீரான், புரபஷனல் கொரியர்
10. அல்ஹாஜ் ஆர். தாவூத் பாட்சா , நிறுவனர் ஆர்.டி.பி.கலை அறிவியல் கல்லூரி
11. அல்ஹாஜ்.எல்.கே.எஸ். சையது அஹமது, திநகர் எல்கேஎஸ். கோல்டு ஹவுஸ் பி லிட்
12. அல்ஹாஜ் எஸ் முஹம்மது ஜலீல், தாளாளர் , சேது பொறியியல் கல்லூரி
13. அல்ஹாஜ் ஏ. அபூபக்கர், தலைவர், பிரசிடெண்ட் ஹோட்டல்
14. அல்ஹாஜ் ஹெச். நூர் முஹம்மது, எம்.டி, ஒலிம்பிக் கார்ட்,சென்னை
15. அல்ஹாஜ். பஷீர் அஹமத்,யூசிமாஸ்
16. அல்ஹாஜ். ஷாகுல் ஹமீது, நோபிள் மரைன்
17. அல்ஹாஜ். பி. அப்துல் காதர், எம்.எஃப்.லெதர்ஸ்
18. அல்ஹாஜ் ராஜா ஹசன் ( ஐக்கிய ஜமாஅத் தலைவர், மதுரை )
19. டாக்டர் எஸ்.ஏ. சையது சத்தார் ( ரப்பானி வைத்திய சாலை )
20. அல்ஹாஜ் எஸ்.எம். அப்துல் வாஹித், தலைவர் அல்ஹாஜ் மர்ஹும்
பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா அறக்கட்டளை
21. வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது
அறங்காவலர், வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளை
22. சீனாதானா அல்ஹாஜ் எஸ்.எம். செய்யது அப்துல் காதர்
தலைவர், ஸ்கை நிறுவனம்,
23. அல்ஹாஜ். சபியுல்லாஹ் ( நிஜாம் பாக்கு, புதுக்கோட்டை )
24. அல்ஹாஜ். ஒயிட் ஹவுஸ் பாரி
25. அல்ஹாஜ் ரபீக் ( தாஜ்மஹால் புகையிலை, புதுக்கோட்டை )
26. அல்ஹாஜ் அமானுல்லாஹ், ஈரோடு
27. அல்ஹாஜ் கே.கே.எஸ்.கே. ஹைதர், ஈரோடு
28. கே. செய்யது முஹம்மது ( இலாஹி இண்டர்னேஷனல் )

JAQH அமீரக செயற்குழு கூட்டம் - துபாய்

"ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - அமீரகம் கிளை "யின்
அமீரக செயற்குழு கூட்டம் -துபாய்







News.... Coming Sooon....

இந்தியாவில் ஐஃபோன்: ஆப்பிள்-வோடஃபோன் ஒப்பந்தம்

Apple - iPhone
டெல்லி: இந்தியாவில் ஐஃபோன்களை விற்க முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஆப்பிளுடன் வோடஃபோன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவனம் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் செல்ஃபோன் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்பட 9 நாடுகளில் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன ஐஃபோன் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா, ஆஸ்திரேலியா, செக் குடியரசு, எகிப்து, கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் ஐஃபோன் சேவையை பெறுவார்கள் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஃபோன் என்பது எச்டிஎம்எல் இ-மெயில் மற்றும் பிரவுசிங் வசதி கொண்ட மொபைல் ஃபோன். இதன்மூலம் இன்டர்நெட்டில் அநாயாசமாக பிரவுஸ் செய்யலாம்.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புக் மார்க்குகளை தானாகவே சின்கரனைஸ் செய்யும் வசதிகூட உண்டு. கூகுள், யாகூ சர்ச் இன்ஜின்கள் இன்பில்ட்டாக உள்ளது.

வயர்லெஸ் கனெக்ஷ்ன் மூலம் செய்திகள் அல்லது படங்களை இ-மெயிலில் அனுப்பிக் கொண்டிருக்கும்போதே தொலைபேசியிலும் பேசமுடியும். ஒரேநேரத்தில் பல இயக்கங்களை செய்யக்கூடியது ஐஃபோன்.

இந்தியாவில் ஐஃபோன்களை விற்பதற்கு முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஆப்பிளுடன் வோடஃபோன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய, கத்தார் வர்த்தக உறவுக்கு வயது 5000 ஆண்டுகள்!


Mesopotamia Ziggural
துபாய்: சிந்து சமவெளி நாகரீக காலத்தில் காணப்பட்டதைப் போன்ற ஒரு கல்லறைத் தோட்டம், கத்தாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய துணைக் கண்டத்திற்கும், மெசபடோமியா, அரேபிய துணைக் கண்டத்திற்கும் இடையே நீண்ட வர்த்தக தொடர்பு இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கத்தாரில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறைத் தோட்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சிந்து சமவெளி காலத்தில் இருந்ததைப் போன்ற தோட்டமாக உள்ளது.

இதன் மூலம் இந்தியாவுக்கும், அரேபிய துணைக் கண்டத்திற்கும் இடையே வர்த்தக தொடர்புகள் நீண்ட காலமாக இருந்திருக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர் முகம்மது அலி அல் சுலைதி கூறுகையில், கத்தாரின் வட மேற்கு கடற்கரைப்பகுதியில் இந்த கல்லறைத் தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கல்லறைத் தோட்டம் சிந்து சமவெளி நாகரீக காலத்தில்தான் இருந்தது.

மேலும், இப்பகுதியில் தற்காலிக குடியிருப்புகளும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் அரேபிய துணைக் கண்டத்திற்கு வர்த்தக ரீதியிலான பயணம் மேற்கொண்டிருக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.

சிந்து வெளிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தகம் தொடர்பாக இங்கு வந்திருக்க வேண்டும். போர்சலின் உள்ளிட்டவற்றை இங்கிருந்து வாங்கி தங்களது பகுதிக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது.

மிகப் பெரிய அளவில் இரு துணைக் கண்டத்திற்கும் இடையே வர்த்தக தொடர்பு இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

இந்த கல்லறைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் ஏராளமான தற்காலிக குடியிருப்புகள் உள்ளன. வர்த்தகர்கள் வந்து தற்காலிகமாக இங்கு தங்கிச் செல்ல இவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இதேபோன்ற தற்காலிகக் குடியிருப்புகள் குவைத், அபுதாபியிலும் கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

மீண்டும் தொடங்கும் எமிரேட்ஸ்-கோவா விமான சேவை

துபாய்: ஐக்கிய அரபு எமிரேஸுக்கும், கோவாவுக்கும் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த மார்க்கத்தில் தனது விமான சேவையை நிறுத்தியது இந்தியன் ஏர்லைன்ஸ். இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் மீண்டும் இச்சேவையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவுக்கான பிராந்திய இயக்குநர் அபய் பதக் கூறுகையில், அடுத்த வாரம் முதல் துபாயிலிருந்து கோவாவுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன சேவை தொடங்கும் என்றார்.

கோவாவுக்கும், ஷார்ஜாவுக்கும் இடையே வாரம் இரு நேரடி விமானங்களை கடந்த மார்ச் 30ம் தேதி வரை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வந்தது. அதேபோல கடந்த டிசம்பர் மாதம், ஏர் இந்தியா நிறுவனம் தான் இயக்கி வந்த வாரம் ஒருமுறை குவைத் -துபாய் -கோவா விமான சேவையை நிறுத்தியது என்பது நினைவிருக்கலாம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 50 ஆயிரம் கோவா மாநிலத்தவர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயில் திடீர் மழை

துபாய்: துபாயில் வழக்கம் போல கொடும் வெயில் வீசிக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை திடீரென மழை பெய்தது.

கோடையில் வெப்பம் மேலும் அதிகமாகி மக்கள் படாத பட்டுவரும் நிலையி்ல் இந்த மழை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

துபாய் தவிர்த்து அமீரகத்தின் மேலும் பல பகுதிகளிலும் மழை பெய்தது.

மழையுடன் கடும் காற்றும் வீசியதால் வழக்கமான வேகத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

கீழக்கரை: கள்ளக் காதலால் பெரும் கலவரம்
ராமநாதபுரம்: கீழக்கரையில் வேன் டிரைவர் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டதை கண்டித்து பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. ...

விமான நிலையத்தில் மோதல்-'பவர் கட்'!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய போலீஸாருக்கு விமான நிலைய ...

குழந்தை சாவு-கணவருக்கு பயந்து நாடகமாடிய தாய்!
விருதுநகர்: காணாமல்போன குழந்தையை மீட்டுத் தருமாறு காவல் நிலையத்தில் குழந்தையின் தந்தை புகார் செய்தார். விசாரணையில் குழந்தை இறந்தது தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், மதுக்குடியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது ..

யுஎப்ஓ'?: பறக்கும் பெண் ணால் மெக்சிகோவில் பரபரப்பு
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் மலைப் பகுதியில் பறந்தபடி வந்து இறங்கி, அங்குமிங்கும் பறந்து சென்ற ஒரு உருவம் வீடியோவில் பதிவாகியுள்ளது. அது ஒரு பெண்ணாக இருக்கக் கூடும் எனக் ...


வேட்பாளர் தேர்வு: குவாம் தீவில் ஓபாமா வெற்றி
ஹகாந்தா (குவாம்): குவாம் தீவில் நடந்த அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான பிரைமரி வாக்கெடுப்பில் பாரக் ஓபாமா, 7 வாக்குகள் வித்தியாசத்தில் ஹில்லாரி கிளிண்டனை தோற்கடித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ...

யாஹூவை வாங்கும் முயற்சியை கைவிட்டது மைக்ரோசாப்ட்
நியூயார்க்: யாஹூ நிறுவனத்தை வாங்கும் முயற்சிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் கைவிட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற ...

பாஸ்போர்ட் மாயம் எதிரொலி: கொடுத்த பாஸ்போர்ட்டுகளை மாற்றும் தூதரகம்
துபாய்: துபாய் இந்தியத் துணைத் தூரகதத்திலிருந்து அனுப்பப்பட்ட காலி பாஸ்போர்ட்டுகள் தொலைந்து போனதைத் தொடர்ந்து சில குறிப்பிட்ட சீரியல் எண் கொண்ட பாஸ்போர்ட்டுகளை ஒப்படைத்து விட்டு புதிய பாஸ்போர்ட்டுக்களைப் ...

கொலை வழக்கில் விடுதலை - ரிலீஸ் ஆகாமல் தவிக்கும் தமிழர்
துபாய்: கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும் கூட, பஹ்ரைன் சிறையிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் தமிழர் ஒருவர். தமிழகத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. பஹ்ரைனில் வேலை பார்த்து வருகிறார். ...

உணவு நெருக்கடிக்கும், விலைவாசி உயர்வுக்கும் இந்தியா காரணம்: புஷ்
வாஷிங்டன்: உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கும், விலைவாசி உயர்வுக்கும் இந்தியாதான் காரணம் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ...

ஹில்லாரிக்கு ஆதரவு பெருகுகிறது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான வாக்கெடுப்பில் திடீரென ஹில்லாரிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் ஓபாமா அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ...

சரப்ஜித் தண்டனை 3வது முறையாக ஒத்திவைப்பு-ஆயுளாக குறைக்க பாக் ஆலோசனை?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் சரப்ஜித்தின் தூக்கு தண்டனை 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க வாய்ப்புள்ளதாகவும், அதுதொடர்பாக அந்நாட்டு அரசு ...

4 மலையாள நாளிதழ்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடை
துபாய்: மலையாள மனோரமா, மத்யமம் உள்ளிட்ட நான்கு மலையாள தினசரிள் மற்றும் 2 உருது தினசரிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அச்சிட்டு பிரசுரிக்க அமீரக அரசு தடை விதித்துள்ளது. ...

நர்கீஸ் புயலுக்கு மியான்மரில் 400 பேர் பலி
யாங்கூன்: மியான்மரைத் தாக்கிய நர்கீஸ் புயலுக்கு 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தமிழகத்தை அச்சுறுத்தி வந்த நர்கீஸ் ...